உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கழுமல மும்மணிக்கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்கழுமல மும்மணிக்கோவை [1] என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மும்மணிக்கோவை என்பது ஒரு சிற்றிலக்கியம்.

இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு.

சீர்காழியின் பழம்பெயர் கழுமலம். இவ்வூரிலுள்ள சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

நூல் அமைதி

[தொகு]

இந்த நூலிலுள்ள ஆசிரியப்பாக்கள் இணைகுறள் ஆசிரியப்பாக்களாக உள்ளன. [2]

வெண்பா (2)
அருளின் கடலடியேன் அன்பென்னு மாறு
பொருளின் திகழ்புகலி நாதன் – இருள்புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
அண்டத்தார் நாமார் அதற்கு.[3]
கட்டளைக்கலித்துறை (6)
ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளர்
தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாத(து)ஒரு
களிவந்த வாஅன் புகைவந்த வாகடை சார்அமையத்(து)
தெளிவந்த வாநம் கழுமல வாணர்தம் இன்னருளே.[4]

காலம் கணித்த கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. திருக்கழுமல மும்மணிக்கோவை மூலம்
  2. முச்சீர், இருசீர் அடிகள் விரவி வருவது இணைகுறள் ஆசிரியப்பா.
  3. ஊரின் பெயரைப் ‘புகலி’ எனக் குறிப்பிடுகிறது.
  4. மனத்திருளுக்கு ஒளியாக விளங்குபவன். நாம் சிந்தித்து உணரமுடியாதபடி நள்ளிருளின் தெளிவாக விளங்குபவன்.