சிவசூத்திரம்
இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும். |
சிவநெறி |
---|
![]() |
![]() |
சிவசூத்திரம் என்பது காஷ்மீர சைவத்தின் நிறுவுனரான வசுகுப்தர் (கி.பி 860–925) எனும் பெரியோனால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.[1][2] காஷ்மீர சைவர்களின் புனித நூல்களுள் இது ஒன்று.
சைவநூல்[தொகு]
பாணினியின் சங்கத மொழியின் ஒலியன்களைப் பற்றிக் குறிப்பிடும் பதினான்கு சிவசூத்திரங்களினின்றும் இச்சிவசூத்திரம் வேறானது. மேலும் தமிழில் வழங்கும் ஓஷோவின் சிவசூத்திரம் இது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாறு[தொகு]
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்தர், ஒரு கனவில் கண்ட திருக்காட்சியை அடுத்து இச்சிவசூத்திரங்களை எழுதினார். சிவசூத்திரங்கள் வசுகுப்தருக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் சங்கரோபால எனும் மலைக்குன்று இன்றும் காசுமீர சைவ அடியவர்களால் யாத்திரை சென்று வழிபடப்படுகின்றது.
விளக்கவுரைகள்[தொகு]
வசுகுப்த சிவசூத்திரத்திற்கு, பிற்காலத்தில் பல விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேமராயரால் எழுதப்பட்ட விமர்சினியும், பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரரால் எழுதப்பட்ட வார்த்திகமும் இவற்றில் முக்கியமானவை. இவை அண்மைக்காலத்தில் ஆங்கிலத்திலும் இத்தாலியிலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
இதனையும் காண்க[தொகு]
மேலதிக வாசிப்புக்கு[தொகு]
- க்ஷேமராஜர் (1911). The Shiva Sutra Vimarshini: Being the Sutras of Vasu Gupta with the Commentary Called Vimarshini. http://books.google.com/books?id=8ziYPgAACAAJ.
உசாத்துணைகள்[தொகு]
- ↑ Jagadish Chandra Chatterji (1914). Kashmir Shaivaism. SUNY Press. பக். 156–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88706-179-0. http://books.google.com/books?id=8ErhIBHJEkwC&pg=PA156.
- ↑ Vasugupta (1992). The Aphorisms of Siva: The Siva Sutra with Bhaskara's Commentary, the Varttika. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-1264-0. http://books.google.com/books?id=o6-n4ulAsdIC.
- ↑ Lakshman Joo (2007). Shiva Sutras: The Supreme Awakening. AuthorHouse. பக். 10–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4343-1407-9. http://books.google.com/books?id=RZOjJgwS4r4C&pg=PA10.