உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீகண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீகண்டர் அல்லது நீலகண்டர் என்பவர் கி.பி 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த சைவ அறிஞர் ஆவார். வேதாந்தம் சார்ந்த பிரஸ்தானத்திரயங்களுக்கு இவரால் உரை எழுதப்பட்டதாகத் தெரிகின்றது. எனினும் இவரால் எழுதப்பட்ட பிரம்ம சூத்திரத்தின் உரையான "ஸ்ரீகண்ட பாடியமே" இன்று முழுமையாகக் கிடைக்கின்றது.[1]

சிவ விதப்பொருமை

[தொகு]

ஸ்ரீகண்டர் பிரம்ம சூத்திர உரையில் முன்வைக்கும் கோட்பாடானது, பெரும்பாலும் இராமானுசரின் விதப்பொருமைக் கோட்பாட்டை ஒட்டியதாகவே காணப்படுகின்றது. பரத்துவத்தை விஷ்ணுவுக்கன்றி சிவத்துக்கு வழங்குவதே முக்கியமான வேறுபாடு. அப்பைய தீட்சிதர், ஹரதத்தர் போன்றோர் இவர் சார்ந்த கோட்பாட்டை சிவ விசிட்டாத்துவிதமாக வளர்த்தெடுத்தனர். இது பின்னாளில் சிரௌத்த சைவமாக முகிழ்த்தது.

கோட்பாடு

[தொகு]

ஸ்ரீகண்டரின் வாழ்க்கை பற்றியோ அவரது வாழ்வியல் பற்றியோ எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனினும் அவர் தென்னாட்டவராக இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் சற்று அதிகமாகவே உள்ளன.[1]

சிவாகமங்கள் சொல்லும் முப்பொருளை ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீகண்டர், சிவமே புடவிக்கு முதற்காரணியும் நிமித்த காரணியும் என்கின்றார். இறைவனின் திருவருட்சக்தியின் தோற்றமாகவே உயிர்களும் உலகும் பரிணமிக்கின்றன. அவை என்றுமுள்ள மலங்களால் அசுத்தமடைகின்றன. இறைவனைப் பிரார்த்திப்பதால், மலங்களை அறுத்து வீடுபேறு அடையலாம்.[2]

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Srikanta Bashya AND TtlE SIDDHANTA SASTRAS.". Siddhanta Deepika VII (07). Ocotber 1906. 
  2. (Appayya Dikshita) Suryanarayana Sastri (1929). Sivadvaita Nirnaya - An inquiry in the system of Srikantha (PDF). University of Madras Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீகண்டர்&oldid=2718301" இலிருந்து மீள்விக்கப்பட்டது