திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்
Appearance
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை |
அமைவிடம் | |
ஊர்: | திருவட்டத்துறை |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றும், திருவரத்துறை என்றும், திருவட்டுறை என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலானது தொழுதூர் விருத்தாச்சலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் ஆனந்தீசுவரர் என்றும் தீர்த்த புரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி என்று அழைக்கப்படுகிறார். [1]
மேற்கோள்கள்
[தொகு]