சரணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரணர் என்பது வீரசைவத்தின் முக்கியமான அடியவர்களைக் குறிப்பிடப் பயன்படும் பதம் ஆகும். சுமார் 200இற்கும் மேற்பட்ட சரணர்கள் வீரசைவ மரபில் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முப்பதுக்கும் மேல் பெண்கள் ஆவர். [1] இவர்கள் வசனங்கள் எனப்படும் புகழ்பெற்ற கன்னட உரைநடைக் கவிதைகளை யாத்திருக்கிறார்கள். இவ்வசனங்களுக்கு, வீர சைவர்களால், தமிழ்த் தேவாரங்களின் அளவு மரியாதை வழங்கப்படுகின்றது.

பஞ்சாச்சாரியார்[தொகு]

பசவர்.
சித்தராமேசுவரர்

சரணர்களுக்கும் வீரசைவத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான ஐவர் "ஸ்தாபனாச்சாரியார்" என்று போற்றப்படுகின்றனர். இந்த ஐவரையும் பஞ்சாச்சார்யர் என்று வழிபடுவது இலிங்காயத மரபு. ஐந்து ஆச்சாரியார்களையும் ஈசனின் ஐந்து முகங்களுடனும், இந்தியாவின் ஐந்து வீரசைவ மடங்களுடனும் இணைப்பது மரபு.[2]

இரேவண சித்தர்[தொகு]

அகத்தியரின் குருவாகச் சொல்லப்படும் இரேவண சித்தர் அல்லது இரேணுகாச்சாரியார் வீடணனுக்கு முந்நூறு கோடி இலிங்கங்களை வழங்கியவர் என்றும் கொல்லிப்பாகையிலுள்ள சோமேசுவர இலிங்கத்துடன் தொடர்பானவர் என்றும் வீரசைவ மரபுரைகள் சொல்கின்றன. இரம்பாபுரியில் இவர் வீரசைவ மடம் அமைத்தார்.

மருள சித்தர்[தொகு]

வடக்ஷேத்திரத்திலுள்ள சித்தேசுவர இலிங்கத்துடன் இணைத்து நோக்கப்படும் மருள ஆராத்தியர், உச்செயினியில் ஒரு மடம் அமைத்தார்.

ஏகோராம ஆராத்தியர்[தொகு]

இவர் பிரம்ம சூத்திரத்துக்கு வீரசைவ மரபில் உரை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. சுதாகுண்டத்தில் இருக்கும் மல்லிகார்ச்சுன இலிங்கத்துடன் தொடர்பானவர். சிறீசைலத்தில் இவரால் ஒரு மடம் அமைக்கப்பட்டது.

பண்டித ஆராத்தியர்[தொகு]

திராட்சாராமத்து இராமநாத இலிங்கத்துடன் தொடர்பானவர். கேதாரத்தில் மடம் அமைத்தார்.

விஷ்வ ஆராத்தியர்[தொகு]

வாரணாசியின் விசுவ இலிங்கத்துடன் தொடர்பானவர். காசியில் மடம் அமைத்தார்.


முக்கிய சரணர்கள்[தொகு]

அக்கா மகாதேவி.

பஞ்சாச்சாரியாரின் கொடிவழியில் வீரசைவத்துக்கு வித்திட்ட முக்கியமானவர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்டோர், பசவர் முதலாய சரணர்கள். முக்கியமான சரணர்களின் பட்டியல் வருமாறு:

 • பசவர்
 • அக்கா மகாதேவி
 • அல்லமப் பிரபு
 • சித்தராமேசுவரர்
 • சென்ன பசவர்
 • சர்வாக்கியர்
 • சிவலெங்க மஞ்சண்ணா
 • ஸ்ரீபதி பண்டிதர்
 • மல்லிகார்ச்சுன பண்டிதாராத்தியர்
 • சகலேச மதராசா
 • ஹரிஹரர்
 • கேரேய பத்மராசா


மேலும் காண்க[தொகு]


உசாத்துணைகள்[தொகு]

 1. Sastri, Nilakanta (2002). A history of South India from prehistoric times to the fall of Vijayanagar.. Oxford University Press.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-560686-8.. 
 2. "Virasaiva Panchacharyaru". பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரணர்&oldid=2098792" இலிருந்து மீள்விக்கப்பட்டது