திரிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிகம், மந்திர மார்க்கத்தின் புறச்சித்தாந்தப் பிரிவைச் சேர்ந்த சைவக்கிளைநெறி ஆகும். சிவனை மாத்ருஸத்பவர் என்ற பெயரில் வழிபடும் திரிகநெறியினர், அவருடன் சேர்த்து, பரை, அபரை, பராபரை எனும் மூன்று சக்திகளை வழிபடுவதால், இந்நெறி திரிகம் (திரி - மூன்று) எனும் பெயரைப் பெற்றது.[1]

நூல்கள்[தொகு]

மாலினிவிஜயோத்தர தந்திரம் முதலான தாந்திரீக நூல்கள், திரிகநெறியின் வரன்முறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி விலாவாரியாக விவரிக்கின்றன.காஷ்மீர சைவத்துக்குப் பெரும் பங்காற்றிய அபிநவகுப்தர் (பொ.பி 925-1025), யாத்த நூல்களில் பல, திரிகத்துடன் தொடர்பானவையாகக் காணப்படுகின்றன. பகவத் கீதைக்கு அபிநவரால் எழுதப்பட்ட கீதார்த்த சங்கிரகமும், அவரது சொந்தப் படைப்புகளான தந்திராலோகம், தந்திராசாரம் முதலானவையும் திரிகர்களைப் பொறுத்தவரை முக்கியமானவை. இன்றைய காஷ்மீர சைவத்தின் முக்கியமான மூன்று மெய்யியல்களுள் ஒன்றாக திரிகத்தைச் சொல்லலாம். ஏனைய இரண்டும் ஸ்பந்தம், பிரத்யபிஞ்ஞை ஆகிய இரண்டுமாகும்.[2]

உசாத்துணைகள்[தொகு]

  1. Swami Lakshman Joo (1988). Kashmir Shaivism: The Secret Supreme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0887065759.
  2. Trika
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிகம்&oldid=3913744" இலிருந்து மீள்விக்கப்பட்டது