சந்தான குரவர்கள்
இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும். |
சிவநெறி |
---|
![]() |
தெய்வங்கள் பரசிவம் பராசக்தி • சதாசிவம் • உருத்திரன் • வயிரவர் வீரபத்திரர் |
சைவ மெய்யியல் |
கிளைநெறிகள் ஆதிமார்க்கம் மந்திரமார்க்கம் ஏனையவை |
சான்றோர் • இலகுலீசர்• அபிநவகுப்தர் • வசுகுப்தர் • நாயன்மார் • மெய்கண்டார் • சமய குரவர் • சந்தான குரவர் •நிரார்த்தா • பசவர் • சரணர் • ஸ்ரீகண்டர் • அப்பையர் •நவநாத சித்தர் |
தொடர்புடையவை |
![]() |
சந்தான குரவர்கள் சைவ சமயத்தின் அன்பு, பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்கள் போன்று அறிவு நெறியை வளர்த்தவர்கள் ஆவர். இவர்களை சைவ சமய சந்தானாசாரியார்கள் என்றும் அழைப்பதுண்டு. [1] சந்தான குரவர்களை அகச்சந்தான குரவர்கள், புறச்சந்தான குரவர்கள் என இருவகையினர்.
அகச்சந்தான குரவர்[தொகு]
திருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். [2] [3] திருகைலாய பரம்பரை என்பது நந்திதேவரே குருவாக கொண்டு ஆரம்பித்தது. நேரடியாக கைலாயத்துடன் தொடர்பு கொண்டமையால் இவர்களை அகச்சந்தான குரவர் என்று அழைக்கின்றனர்.
புறச்சந்தான குரவர்[தொகு]
அகச்சந்தான குரவர்களில் நான்காமவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தான குரவர்கள் ஆவர். [3]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ சைவ சமய சிந்தாமணி - சைவப் புலவர் கா அருணாசல தேசிகமணி
- ↑ http://thiruvavaduthuraiadheenam.com/index.php/home/ திருவாடுதுறை ஆதினம் வரலாறு
- ↑ 3.0 3.1 https://thirumarai.com/santana-kuruvar/ சந்தான குரவர்கள்