தருமை ஆதீனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தருமபுர ஆதீனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தருமபுரம் ஆதீனம்
நிறுவனர்குரு ஞானசம்பந்தர்
தலைமையகம்
  • மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா
முதல் ஆதீனம்
குரு ஞானசம்பந்தர்
தற்போதைய ஆதீனம்
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்
சார்புகள்ஹிந்து மதம், சைவம்
வலைத்தளம்http://www.dharmapuramadheenam.org/

தருமபுரம் ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது. 1987-இல் சுமார் 27 சிவாலயங்கள் இதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.[1]

இந்த மடம் குருஞான சம்பந்தரால் துவங்கப்பட்டது.

இவ்வாதீனம் சமயம் சார்ந்த பணிகளோடு, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தும், சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை(அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்குப் பெருந்தொகை வழங்கியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி புரிந்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. ஞானசம்பந்தம் என்ற திங்கள் இதழையும் இந்த மடம் வெளியிடுகிறது[2]

கோவில்கள்[தொகு]

தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் சமயக்குறவர் மூவரால் பாடப்பெற்ற பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் இடம்பெற்றவை

பாடல் பெற்ற ஸ்தலங்கள்[தொகு]

மயிலாடுதுறை மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
  • கைலாசநாதர் ஆலயம், கிடாரம்கொண்டான், திருவாரூர் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி மாநிலம்

ஏனைய தலங்கள்[தொகு]

கட்டளைகள்[தொகு]

  • திருவாரூர் தியாகராஜர் கோவில் - இராஜன் கட்டளை
  • மயிலாடுதுறை - குமரக்கட்டளை
  • திருவிடைமருதூர் - பிச்சக்கட்டளை

கிளை மடம்[தொகு]

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் அமைத்துள்ள மவுன மடம் தருமை ஆதீனத்தின் கிளை மடமாகும். தாயுமானவர் கோவிலுக்குரிய பல கட்டளைகள் மவுன மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அவை மவுன மட கட்டளை என்று அழைக்கப்படுகிறது

ஆதீனங்கள் பட்டியல்[தொகு]

ஆதீன நிறுவனர் குருஞான சம்பந்தருடன் சேர்த்து இதுவரை 27 பேர் ஆதீனத்தின் தலைமை பொறுப்பை அலங்கரித்துள்ளனர். அவர்களின் பட்டியல் கீழே

தற்போதைய ஆதீனங்கள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் (இடமிருந்து இரண்டாவது)
தருமபுர ஆதீன குருமரபு அட்டவணை
எண் பெயர் குறிப்பு
1 ஸ்ரீ குருஞானசம்பந்த குருமூர்த்திகள் ஆதீன நிறுவனர்
2 ஸ்ரீலஸ்ரீ ஆனந்தபரவச தேசிகர் குருஞானசம்பந்த ஸ்வாமிகள் முக்திக்கு பின் இரண்டாவதாக தலைமை பொறுப்பேற்ற இவர், தலைமை ஏற்ற அன்றே முக்தி பெற்றார்
3 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
4 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் பெருந் தமிழ்ப் புலவரான குமரகுருபரர் இவரது சீடர் ஆவார். இவரது கட்டளைப்படியே குமரகுருபரர் காசிக்கு சென்று குமாரசாமி மடத்தை நிறுவினார். பின்னாளில் அதன் தலைமையிடம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டு திருப்பனந்தாள் காசிமடமாக என்ற பெயரில் செயல்படுகிறது. இவர் மேல் கொண்ட பக்தியால் பண்டார மும்மணி கோவை என்றொரு மும்மணி கோவையை குமரகுருபரர் இயற்றினார்.

முதுமொழிமேல் வைப்பு நூலின் ஆசிரியர் வெள்ளியம்பலவாண முனிவரும் இவரது மாணாக்கரே

5 ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
6 ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தேசிகர்
7 ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிகர்
8 ஸ்ரீலஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்
9 ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகர் சித்தாந்த நிச்சயம் என்றொரு சரித்திர நூல் இவர்களால் இயற்றப்பட்டது
10 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
11 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
12 ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தேசிகர்
13 ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
14 ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிகர்
15 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்
16 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
17 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
18 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
19 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
20 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
21 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
22 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
23 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் 30-10-1923 முதல் 26.06.1933 வரை
24 ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர் இவரது ஆட்சிக்காலத்தில் சிவாகம பாடசாலை, தேவார பாடசாலை, குருஞானசம்பந்தர் துவக்கப்பள்ளி, ஞானசம்பந்தம் மாத இதழ் முதலியன துவங்கப்பட்டன. காலம் - 26.06.1933 முதல் 20.05.1945 வரை
25 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலம் - 20.05.1945 முதல் 10.11.1971 வரை
26 ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காலம் - 10.11.1971 முதல் 03.12.2019 வரை
27 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் காலம் - 13.12.2019 முதல் தற்போது வரை

நன்கொடைகள்[தொகு]

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் கட்ட தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் தமிழக அரசுக்கு தானமாக வழங்கப்பட்டது. [3][4]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

தருமபுரம் ஆதீனத்தால் பல பள்ளிகளும் ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது

  • சிரீ குருஞான சம்பந்தர் பிலே சுகூல், மயிலாடுதுறை
  • சிரீ குருஞான சம்பந்தர் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி, மயிலாடுதுறை
  • சிரீ குருஞான சம்பந்தர் அரசு உதவி பெரும் மேல்நிலை பள்ளி, தர்மபுரம்
  • சிரீ குருஞான சம்பந்தர் மிசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, மயிலாடுதுறை
  • சிரீ குருஞான சம்பந்தர் மிசன் மெட்ரிக் பள்ளி, திருக்கடையூர்
  • சிரீ குருஞான சம்பந்தர் மிசன் முத்தையா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வைதீஸ்வரன்கோவில்
  • சிரீ குருஞான சம்பந்தர் மிசன் VTP  நடுநிலை பள்ளி, சீர்காழி
  • சிரீ குருஞான சம்பந்தர் மிசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சிதம்பரம்
  • தருமபுரம் ஆதீனம் கலை கல்லூரி, தர்மபுரம்

இதனையும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. Thangaraj (2003). Tamil Nadu: an unfinished task. SAGE. பக். 170. ISBN 0761997806, ISBN 978-0-7619-9780-1. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-12-12.
  3. https://www.puthiyathalaimurai.com/newsview/127382/Chief-Minister-laid-the-foundation-stone-of-Mayiladuthurai-New-Collector-s-Office-through-video
  4. "பால் பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சியரகம் அமைக்க எதிா்ப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.

காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமை_ஆதீனம்&oldid=3557388" இலிருந்து மீள்விக்கப்பட்டது