குருஞான சம்பந்தர்

குரு ஞான சம்பந்தர் அல்லது குருஞான சம்பந்த தேசிய சுவாமிகள் என்பவர் 16 ம் நூற்றாண்டில் திருவில்லிபுத்தூரில் பிறந்து திருவாரூரில் வாழ்ந்த ஒரு சைவ குருமாரும், தமிழ் அறிஞரும் ஆவார்.
இவரது காலம் கி.பி.1550 ~ கி.பி.1575 ஆகும். [1]
வரலாறு
[தொகு]இளமைக் காலம்
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள வில்லிப்புத்தூரில் சுப்பிரமணியம் - மீனாட்சி எனும் தம்பதிகளுக்கு மகனாக குருஞான சம்பந்தர் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் ஞானசம்பந்தன் என்பதாகும். பெற்றோருடன் மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவர் கோவிலுக்கு சென்றவர், அங்கேயே பெற்றோரின் அனுமதியுடன் தங்கினார்.
குருவைப் பெறுதல்
[தொகு]ஒரு நாள் லிங்க பூசை செய்ய விரும்பியவருக்கு இறைவன் பொற்றாமரைக் குலத்திலிருந்து லிங்கம் பெற வழிவகை செய்தார். அந்த லிங்கத்தினை பூசை செய்வதற்கு குருவிடம் தீட்சை பெறுதல் வேண்டுமென எண்ணினார். அன்று இரவு கனவில் வந்த இறைவன், திருவாரூர் ஞானப்பிரகாசரிடம் சீடனாக சேர வலியுருத்தினார்.
இறைவனின் ஆலோசனைப்படி ஞானப் பிரகாசரை குருவாக ஏற்று சைவத்தினைக் கற்றார்.
குருவாகுதல்
[தொகு]ஞானப் பிரகாசர் அர்த்தசாமப் பூசை முடியும் வரை கோவிலிருந்து இருந்து பின் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை அவருக்கு வழிகாட்ட தீப்பந்தம் ஏந்தும் இளைஞன் வராமல் போக அப்பொறுப்பினை ஞானசம்பந்தர் ஏற்றார். அதனை மறந்த ஞானப் பிரகாசர் வீடு திரும்பியதும், தீப்பந்தம் ஏந்திவந்த ஞானசம்பந்தரை வெளியே நிற்கும்படி கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். இரவு மழைப் பெய்தாலும் அவ்விடம் விட்டு நகராது நின்றார். அவர் ஏந்தியிருந்த தீப்பந்தம் அணையாது இருந்தது.
மறுநாள் ஞானப் பிரகாசரின் மனைவி மழையில் நனைந்து தீப்பந்தம் ஏந்தியவாறே நின்றிருக்கும் ஞான சம்பந்தரைக் கண்டு வியந்து ஞானப் பிரகாசரிடம் கூறினார். இறைவனின் அருளைப் பெற்றவர் ஞான சம்பந்தர் என்று உணர்ந்த குருப் பிரகாசர், இனி ஞான சம்பந்தர் குருவாக இருந்து மக்கள் தொண்டாற்றும் படி வாழ்த்தியனுப்பினார்.
குருஞான சம்பந்தர்
[தொகு]ஞான சம்பந்தர் மக்களுக்கு சைவ சமயத்தினை போதித்தார். பிறகு தர்மபுரத்தில் சைவ மடத்தினை அமைத்து மக்களுக்குத் தொண்டாற்றினார். இது தருமையாதீனம் என்று அழைப்பட்ட தருமபுர ஆதினமாகும். [3] தர்மபுரத்திலேயே தொண்டாற்றி மறைந்தார்.
குரு தீட்சை
[தொகு]இவர் கமலை ஞானப்பிரகாசரிடம் சீடராக சேர்ந்து தீட்சை பெற்றார்.
நூல்கள்
[தொகு]இவரால் படைக்கப்பட்ட நூல்களின் அகரவரிசை:
- சிவபோகசாரம்
- சொக்கநாத வெண்பா
- சொக்கநாதக் கலித்துறை
- தசகாரிய அகவல்
- திரிபதார்த்த ருபாதி
- நவரத்தினமாலை
- பண்டாரக் கலித்துறை/ஞானப் பிரகாசமாலை
- பிராசாத யோகம்
- முத்திநிச்சியம்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-15. Retrieved 2015-03-06.
- ↑ "தீர்வு கிடைக்கும்!". www.dinamalar.com. Retrieved 2021-03-24.
{{cite web}}
: Text "Varamalar" ignored (help); Text "tamil weekly supplements" ignored (help); Text "வாரமலர்" ignored (help) - ↑ கமலை ஞானப்பிரகாசர் தமிழாயுவு ஆர்க்