பரஞ்சோதி முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதியவர். இவர் வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகன் ஆவார். தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் பயிற்றுவித்தார். திருமறைக்காட்டில் கோவில் கொண்டுள்ள சிவனைத் துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோவில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரைக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், அந்நகரில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அதற்கிணங்கிப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதினார்.திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரஞ்சோதி_முனிவர்&oldid=2812015" இருந்து மீள்விக்கப்பட்டது