உள்ளடக்கத்துக்குச் செல்

வேதாரண்யம்

ஆள்கூறுகள்: 10°22′39″N 79°50′58″E / 10.377400°N 79.849500°E / 10.377400; 79.849500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேதாரணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வேதாரண்யம்
வேதாரண்யம்
இருப்பிடம்: வேதாரண்யம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°22′39″N 79°50′58″E / 10.377400°N 79.849500°E / 10.377400; 79.849500
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
வட்டம் வேதாரண்யம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
நகர்மன்றத் தலைவர் மா. மீ. புகழேந்தி தி.மு.க
சட்டமன்றத் தொகுதி வேதாரண்யம்
சட்டமன்ற உறுப்பினர்

ஓ. எஸ். மணியன் (அதிமுக)

மக்கள் தொகை 34,266 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


29 மீட்டர்கள் (95 அடி)

குறியீடுகள்

வேதாரண்யம் (ஆங்கிலம்:Vedaranyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேதாரண்யம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இங்கு இருக்கும் மறைக்காட்டுநாதர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் திருமறைக்காடு என்பதாகும். கோடியக்கரை காப்பகம் இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது

வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்

வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, நீடாமங்கலம் நீரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.17%, இசுலாமியர்கள் 8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாரண்யம்&oldid=4009009" இலிருந்து மீள்விக்கப்பட்டது