உள்ளடக்கத்துக்குச் செல்

சம்புவரையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்புவரைய அரசு
12 ஆம் நூற்றாண்டு–1375
தலைநகரம்படைவீடு[1], விருஞ்சிபுரம்
பேசப்படும் மொழிகள்தமிழ்
சமயம்
இந்து
அரசாங்கம்முடியாட்சி
• கி.பி. 1236 - 1268
ராஜ கம்பீரர்
• கி.பி. 1322 - 1337
மண்கொண்டார்
• கி.பி. 1337 - 1373
ராஜ நாராயணர்
• கி.பி. 1356 - 1375
ராஜ நாராயணர் III
வரலாற்று சகாப்தம்இடைக்காலம்
• தொடக்கம்
12 ஆம் நூற்றாண்டு
• முடிவு
1375
முந்தையது
பின்னையது
[[பாண்டியர்]]
[[விஜயநகரப் பேரரசு]]

சம்புவரையர்கள் வட தமிழ்நாட்டை ஆண்ட சிற்றரச மரபினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் இடைக்கால மற்றும் பிற்கால சோழர் அரசாங்கத்தின் கீழ் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். சோழர்களின் அழிவுக்குப்பின் வடதமிழ்நாட்டின் சில பகுதிகளை ஆண்டிருக்கின்றனர். அதில் தற்போது தமிழக மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் அடங்கும்.

தோற்றம்

வரலாற்றாசிரியர் பர்டன் ஸ்டெய்னின் கூற்றுப்படி, சோழர்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் சம்புவராயர்கள் ஆவர்.[2] சம்புவாராய தலைநகரம் மருதராய படைவீடு என்ற இடத்தில் இருந்தது. இப்போது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் படைவீடு என்று அழைக்கப்படுகிறது. படைவீடு (படவேடு என்றும் உச்சரிக்கப்படுகிறது) பிரபலமான ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலின் தலம் ஆகும்.[3]

படைவீட்டின் அமைப்பு

சம்புவராயர்கள், ஆரணியை அடுத்த படைவீட்டை தலைநகராகக் கொண்டிருந்தனர். இவர்களின் ஆட்சி எல்லை பரப்பு வடபெண்ணை முதல் காவிரி வரை பரந்து விரிந்திருந்தது. இவர்கள் வீரசம்புவர் குளிகை என்ற நாணயத்தைப் வெளியிட்டு பயன்படுத்தினர். அவர்கள் கொடியில் காளை இடம்பெற்றிருந்தது. படைவீடு, விரிஞ்சிபுரம் என இரண்டு இடங்களில் அவர்களின் தலை நகரங்கள் செயல்பட்டன. படைவீடு நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை அரண்களால் ஆனது. விரிஞ்சிபுரம் கோட்டை பாலாற்றங்கரையில் அமைந்திருந்தது. படைவீட்டுக்கு செல்ல இரண்டு வாசல்கள் உண்டு. ஒன்று சந்தவாசல், இன்னொன்று வழியூர் வாசல் ஆகும். இரண்டும் அந்த மலைசூழ் பகுதிக்குள் செல்வதற்கான கணவாய் போன்றவை. இவற்றைக் கடந்துதான் படைவீடு கோட்டையை அடைய முடியும். படைவீட்டின் வீரர்களைக் கடந்து கோட்டையை அடைவது அவ்வளவு எளிதாக இருந்திருக்க முடியாது என்பதை தற்போதைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மதுரா விஜயம்

மதுரா விஜயம் என்னும் நூலில் விஜயநகரப் பேரரசு மன்னனான முதலாவது புக்கா ராயன் என்பவன் தன் மகனான கம்பன்னனிடம் ”நீ சம்புவரையரை பணியவைத்தால் மதுரையிலுள்ள இசுலாமிய மன்னர்களையும் பணிய வைத்து விடலாம்” என்று கூறுவதிலிருந்து, பதினான்காம் நூற்றாண்டில் சம்புவரையர் செல்வாக்கை அறியலாம். படைவீட்டுக்கு செல்ல இரண்டு வாசல்கள் உண்டு. ஒன்று சந்தவாசல், இன்னொன்று வழியூர் வாசல் ஆகும். இரண்டும் அந்த மலை சூழ் பகுதிக்குள் செல்வதற்கான கணவாய் போன்றவை. இவற்றைக் கடந்துதான் படைவீடு கோட்டையை அடைய முடியும். படைவீட்டின் வீரர்களைக் கடந்து கோட்டையை அடைவது அவ்வளவு எளிதாக இருந்திருக்க முடியாது என்பதை தற்போதைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சம்புராயர்கள் தோற்றம்:

     பல்லவ பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு பல்லவ பேரரசு குறுநில மன்னர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர் அதில் சம்புவராயர்கள், காடவராயர்கள்,தொண்டைமான்கள், கச்சிராயர்கள் போன்றோர் குறிப்பிட தகுந்தோர் ஆவார்கள்....

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-01. பார்க்கப்பட்ட நாள் 2011-11-15.
  2. Burton Stein, Formerly Professor of History School of Oriental and African Studies Burton Stein. The New Cambridge History of India: Vijayanagara. Cambridge University Press, 1989. p. 54.
  3. https://www.bbc.com/news/science-environment-45814659
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்புவரையர்&oldid=3607190" இலிருந்து மீள்விக்கப்பட்டது