உள்ளடக்கத்துக்குச் செல்

பெ. சு. தி. சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. சு. தி. சரவணன் (P. S. T. Saravanan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் பெரியகேளம்பாடியினைச் சார்ந்தவர். விவசாயியான சரவணன், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த சரவணன் மே 2021 நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

இவரின் தந்தையான மறைந்த பெ. சு. திருவேங்கடம் கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து நான்குமுறை தேர்ந்தெடுக்கபட்டவராவார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Saravanan.P.S.T(DMK):Constituency- KALASAPAKKAM(TIRUVANNAMALAI) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-10-19.
  2. "Saravanan P S T". News18. Retrieved 2021-10-19.
  3. "திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் காலமானார்". Hindu Tamil Thisai. Retrieved 2022-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._சு._தி._சரவணன்&oldid=3602197" இலிருந்து மீள்விக்கப்பட்டது