ஐதராபாத்து பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 17°27′36″N 78°19′55″E / 17.4599791°N 78.3320099°E / 17.4599791; 78.3320099

ஐதராபாத்து பல்கலைக்கழகம்
హైదరాబాద్ విశ్వవిద్యాలయము
University of Hyderabad Logo.png
குறிக்கோளுரைதெலுங்கு: సా విద్య య విముక్తతే
ச வித்யா யா விமுக்ததே
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"விடுதலைக்கு வித்திடும் கல்வி."
வகைபொது
உருவாக்கம்1974
வேந்தர்சி.ரங்கராசன்
துணை வேந்தர்பேரா. அப்பா ராவ் பொடிலெ[1][2][3]
அமைவிடம்காச்சிபௌலி, ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
வளாகம்2,300 ஏக்கர்கள் (9,300,000 m2)
நகரியம்
சேர்ப்புப.மா.கு, என்ஏஏசி, ஏ.ஐ.யு, ஏசியு
இணையதளம்www.uohyd.ac.in

ஐதராபாத்து பல்கலைக்கழகம் (University of Hyderabad,தெலுங்கு: హైదరాబాద్ విశ్వవిద్యాలయము; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: ஹதராபாது விஸ்வவித்யாலயமு), அல்லது ஐதராபாத்து நடுவண் பல்கலைக்கழகம் (Hyderabad Central University) தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும்.

1974இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம் பெரும்பாலும் வளாகத்தில் தங்கி படிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது; பல்வேறு துறைகளில் 400 ஆசிரியர்களும் 5,000 மாணவர்களும் இருக்கின்றனர்.[4] தெலுங்கானா மாநில ஆளுநர் பல்கலைக்கழகத்தின் பதவிசார் முதன்மை முகவராகவும் (ரெக்டர்) இந்தியக் குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகத்தின் வருநராகவும் (விசிட்டர்) உள்ளனர்.

தனித் தெலுங்கானா போராட்டத்தை அடுத்து 1973இல் ஏற்பட்ட உடன்பாட்டின் ஆறு-புள்ளி சூத்திரத்தின்படி இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. இதன் முதல் துணை வேந்தராக பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் கரிம வேதியியியலாளர் குர்பக்சு சிங் 1974 முதல் 1979 வரை பணியாற்றினார். இதன் முதல் வேந்தராக பி.டி. ஜட்டி பொறுப்பிலிருந்தார்.

ஐதராபாத்து பல்கலைக்கழகம் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக, சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் மற்றும் இந்தியத் தொழினுட்பக் கழகங்களுக்கு இணையாக, கருதப்படுகின்றது. இந்தியாவின் முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, குறிப்பாக ஆராய்ச்சிக்கு, தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகின்றது. சனவரி 2015இல், இந்தியக் குடியரசுத் தலைவரால் சிறந்த நடுவண் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் வருநர் விருது ஐதராபாத்து பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளது.[5]

இந்தப் பல்கலைக்கழகம் காச்சிபௌலியில் கிட்டத்தட்ட 2300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தாவரவகைகளும் விலங்கினங்களும் மிகுந்துள்ளன; 734 வகை தாவரங்களும் பத்துவகை பாலூட்டிகளும் பதினைந்து வகை ஊர்வனவும்[6] 159 வகை பறவைகளும் உள்ளன.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Office of the Vice Chancellor". University of Hyderabad. 2012. 8 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 October 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "P. Appa Rao is new UoH V-C". The Hindu. The Hindu. 22 September 2015. http://www.thehindu.com/news/cities/Hyderabad/p-appa-rao-is-new-uoh-vc/article7676119.ece. பார்த்த நாள்: 23 October 2015. 
  3. "Prof Appa Rao new VC of UoH". THE HANS INDIA. THE HANS INDIA. 22 September 2015. http://www.thehansindia.com/posts/index/2015-09-22/Prof-Appa-Rao-new-VC-of-UoH-177041. பார்த்த நாள்: 23 October 2015. 
  4. "About University of Hyderabad". University of Hyderabad. 2012. 22 ஜூலை 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 October 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. UoH is India’s best Central varsity
  6. "Land alienation threatens University of Hyderabad’s flora and fauna". Times of India. Oct 29, 2012. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Land-alienation-threatens-University-of-Hyderabads-flora-and-fauna/articleshow/16997539.cms. பார்த்த நாள்: 11 October 2015. 
  7. "Ebird hotspot - University of Hyderabad". EBird. 11 October 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]