மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்
உலக சதுரங்க ஓப்பன் 2004
நாடுஇந்தியா
பிறப்பு10 ஆகத்து 1983 (1983-08-10) (அகவை 40)
மதுரை, இந்தியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (2006)
பிடே தரவுகோள்2474 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2586 (செப்டெம்பர் 2011)

மகேஷ் சந்திரன் பஞ்சநாதன் (பிறப்பு 10 ஆகஸ்ட் 1983) ஓர் இந்திய சதுரங்க வீரர்.இவருக்கு 2006இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது.

மகேஷ் சந்திரன் மதுரையில் பிறந்தார். 2003இல் இவர் இலங்கையில் நடந்த ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியை வென்றார்.[1] 2005ஆம் ஆண்டில் அமெரிக்க சுதந்திர தின வார இறுதியில் பிலடெல்பியாவில் 33வது உலக சதுரங்க ஓபனில் விளையாடி கமில் மிடோஸுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். [2] அதே ஆண்டில் இவர் டெக்சாசின் ரிச்சர்ட்சனில் நடந்த யூ.டீ.டீ. ஜி.எம். அழைப்பிதழ் போட்டியில் முதலிடம் பிடித்தார்.[3] 2008ஆம் ஆண்டில் இவர் கோலாலம்பூர் ஓபனில் நுகுயென் ஆன்ஹ துங் ,சடிக்கின் இருவாண்டோ மற்றும் சுசான்டோ மேகரண்டோ ஆகியோருடன் இணைந்து 3–6வது இடங்களை பகிர்ந்து கொண்டார்.[4] 2009இல் மும்பை மேயர் கோப்பையில் அலெக்சாண்டர் அரெஸ்சேங்கோ, கொனேரு ஹம்பி மற்றும் எவ்கெஞ்சி மிரோஷ்ணி சென்கோ ஆகிய மூவருடன் இணைந்து 1-4ஆம் இடங்களை பகிர்ந்து கொண்டார்.[5] 2010இல் கான்பரா டோபேர்ள் கோப்பையில் கலந்து கொண்டு 3-6வது இடங்களை விளாடிமிர் மலானியுக், டேவிட் ஸ்மெர்டோன், சப்தரிஷி ராய் சவுத்ரி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.[6] 2011 ஆம் ஆண்டில் 3ஆவது ஒரிஸ்ஸா சர்வதேச ஜிஎம் ஓபன் சதுரங்க போட்டியில் [7] டிக்ரான் எல். பெட்ரோசியன் மற்றும் அபிஜித் குப்தாவுடன் 2வது–4வது இடங்களை பகிர்ந்து கொண்டார் மற்றும் பெர்க்லி சர்வதேச சதுரங்க போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[8] 2012இல் இவர் பிலடெல்பியா ஓபனை 7/9 புள்ளிகளுடன் வென்றார்.[9] 2015 இல், மோரிசுடவுனில் நடந்த நியூஜெர்சி ஓபன் போட்டியில் செர்ஜி அசரோவ் உடன் இணைந்து முதலிடம் பிடித்தார்; இரு வீரர்களும் 5/6 மதிப்பெண் பெற்றனர்.[10]

மகேஷ் சந்திரன் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தார்.

சான்றுகள்[தொகு]

 

  1. Crowther, Mark (28 July 2003). "TWIC 455: 26th Asian Junior Championships". The Week in Chess. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  2. "Live 8 and chess in Philadelphia". ChessBase. 2005-07-06. பார்க்கப்பட்ட நாள் 21 May 2010.
  3. "Tournament report April 2006: UTD GM Invitational". FIDE. பார்க்கப்பட்ட நாள் 21 May 2010.
  4. "Tournament report April 2009: KL Open 2008 - Malaysia". FIDE. பார்க்கப்பட்ட நாள் 25 May 2010.
  5. Zaveri, Praful (2009-05-15). "Areshchenko triumphs in Mayor's Cup – Jai Ho Mumbai!!". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 10 May 2010.
  6. Crowther, Mark (2010-04-12). "TWIC 805: Doeberl Cup". London Chess Centre. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  7. "GM Aleksej Aleksandrov victorious in Orissa". Chessdom. Archived from the original on 7 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 7 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "2011 Berkeley International". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 19 February 2012.
  9. "Results are in at the Philadelphia Open". The United States Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012.
  10. Tamburro, Pete (8 September 2015). "Magesh Panchanathan Wins New Jersey Open". The United States Chess Federation. Retrieved 7 August 2020.

வெளி இணைப்புகள்[தொகு]