பிரவீன் தீப்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரவீன் தீப்சே
முழுப் பெயர்பிரவீன் மகதியோ தீப்சே
நாடு இந்தியா
பிறப்பு12 ஆகத்து 1959 (1959-08-12) (அகவை 64)
பட்டம்கிராண்டு மாசுட்டர்
உச்சத் தரவுகோள்2515 சனவரி 1995

பிரவீன் தீப்சே (Praveen Mahadeo Thipsay) என்பவர் ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். 1959 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் நாள் இவர் பிறந்தார்.பாக்யசிறீ தீப்சே இவருடைய மனைவியாவார்.

1982, 1984, 1985, 1989, 1992, 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டிகளில் பிரவீன் தீப்சே வெற்றி பெற்றார். மேலும், 1982, 1984, 1988, 1992, 1994, 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு எனப்படும் சதுரங்க ஒலிம்பிக் போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடினார்[1]

1985 ஆம் ஆண்டில் காமன்வெல்த்து சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் முதலிடத்திற்காக நடைபெற்ற போட்டியில் கெவின் சிபிரேகெட்டுடன் இணைந்து அப்பட்டத்தைப் பெற்றார். டெக்ரான் நாட்டில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 4 முதல் 7 ஆவது இடம் வரை நிர்ணயிக்கும் போட்டியில் செர்கி சாக்ரிபெய்னி, முகம்மது அல் மோதியாக்கி, அமான்முராத் காகாகெல்டைவ் ஆகியோருடன் சமபுள்ளிகள் ஈட்டி இணைந்து பட்டம் பெற்றார்[2]. 2004 ஆம் ஆண்டில் புனேவில் நடைபெற்ற போட்டியில் இவர் 2 முதல் 6 வரையுள்ள இடத்திற்கான போட்டியில் சமப்புள்ளிகள் ஈட்டி மராத் டிசுமுவேவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார்[3]. லக்னோவில் இதே ஆண்டு நடைபெற்ற மற்றொரு போட்டி ஒன்றில் 2 முதல் 3 வரையுள்ள இடங்களுக்கான போட்டியில் சாய்டாலி லுல்தாச்சேவ் மற்றும் சக்கரவர்த்தி தீபன் ஆகியோருடன் சேர்ந்து வெற்றி பெற்றார்[4].2007 ஆம் ஆண்டு மங்களூரில் நடந்த அனைத்து இந்திய பிடே ஓப்பன் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று அப்போட்டியையும் வென்றார்[4].

சதுரங்க அளவிட்டு முறைகளின் வழியாக நோக்குகையில் 1981 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் பிரவீன் தீப்சேவின் ஆட்டம் உச்சத்தில் இருந்தது. பிடே தரவரிசை அளவான 2571 புள்ளிகள் என்ற மதிப்பீட்டுக்கு இணையான முன்னேற்றத்தை பிரவீனின் ஆட்டம் வெளிப்படுத்தியது. அப்பொது பிரவீன் தீப்சே உலக தரவரிசையில் 141 ஆவது இடத்தில் இருந்தார். பிரைட்டனில் நடைபெற்ற சாம்பியன் பட்டப் போட்டியில் 6.5/10 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது இவருடைய சிறப்பான வெற்றியாகும். 2549 பிடே தரப்புள்ளிகள் கொண்ட ஆட்டக்காரரை எதிர்த்து விளையாடிய பிரவீன் தீப்சே 2623 பிடே புள்ளிகளுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்[5]. 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிடே பெயர் பட்டியலில் இவர் இந்திய சதுரங்க வீர்ர்களின் வரிசையில் 24 ஆவது இடத்தைப் பிடித்திருந்தார். 1997 ஆம் ஆண்டு விசுவநாதன் ஆனந்து மற்றும் மற்றும் திப்யேந்திர பருவா ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இந்தியராக இவர் கிராண்டு மாசுட்டர் பட்டம் பெற்றார்.

நிகழ் நேரத்தில் நடைபெறும் பிடே போட்டிகளில் பிரவீன் தீப்சே தீப்சே என்ற பயணர் பெயரிலும், செசுகியூப் எனப்படும் நிகழ்நேர போட்டியில் ஐயுந்தி என்ற பயணர் பெயரிலும் இவர் விளையாடினார்.

மகளிர் அனைத்துலக மாசுட்டர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைத்துலக மாசுட்டர் பாக்யசிறீயை பிரவீன் தீப்சே திருமணம் செய்து கொண்டார்[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bartelski, Wojciech. "Men's Chess Olympiads: Praveen Thipsay". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
  2. Crowther, Mark (1998-09-28). "TWIC 203: Asian Men's Individual Championships". London Chess Center. Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
  3. Crowther, Mark (2004-10-10). "TWIC 518: Piloo Mody International Open". London Chess Center. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
  4. 4.0 4.1 Zaveri, Praful (2007-08-07). "GM Pravin Thipsay triumphs in Mangalore". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
  5. Sonas, Jeff. "Event Details: Brighton (BCF Championship), 1984". Chessmetrics. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
  6. Wall, Bill. "Chess players and their spouses". Chess.com. Archived from the original on 14 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_தீப்சே&oldid=3780197" இலிருந்து மீள்விக்கப்பட்டது