லலித் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லலித் பாபு
முழுப் பெயர்லலித் பாபு
நாடு இந்தியா
தலைப்புகிராண்ட்மாஸ்டர்

எம். ஆர். லலித்பாபு (M. R. Lalith Babu) (பிறப்பு - சனவரி 5 , 1993[1])ஓர் இந்திய சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார்.[2] முசுனுரி லலித் பாபு என்ற பெயராலும் இவர் அடையாளப்படுத்தப்படுகிறார். ஆந்திரப்பிரதேச மாநிலம் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள விசயவாடாவில் இவர் பிறந்தார்.

2017 நவம்பரில் பாட்னாவில் நடைபெற்ற 55 ஆவது இந்திய தேசிய முதல்நிலை சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் வெற்றிபெற்று நாட்டின் சதுரங்க சாம்பியன் என்ற தகுதியை அடைந்தார்.[3] 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று லலித்பாபு அனைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற தகுதிநிலையை அடைந்தார். இதே ஆண்டு அக்டோபரில் எசுப்பானியாவின் பாலாகுவர் நடைபெற்ற போட்டி, 2010 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி, இங்கிலாந்தின் ஏசுட்டிங்சில் நடைபெற்ற போட்டி ஆகிய போட்டிகளின் மூலம் கிராண்டுமாசுட்டர் தகுதிநிலைகளை எட்டினார்.[4]

2014 ஆகத்தில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் எலோ தரவுகோள் முறையில் 2565 புள்ளிகளும், உலகத் தர வரிசை பட்டியலில் 394 ஆம் இடமும் பெற்றார்[5]. 2014 ஆம் ஆண்டு நார்வேயில் நடைபெற்ற 41 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் விளையாடிய குழுவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது[6]. 2009 இல் நெதர்லாந்தின் லைடனில் நடைபெற்ற போட்டியை வென்று லைடன் சாம்பியன், 2010 இல் இந்தியாவில் புதுதில்லியில் நடைபெற்ற பொதுநலவாய போட்டியில் வெண்கலப் பதக்கம், 2012 இல் பார்சிலோனா சாம்பியன் எனப்பல வெற்றிகளை ஈட்டினார்.

சென்னையில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க வாகையாளர் போட்டி, இதே நகரில் 2013 இல் நடைபெற்ற சென்னை சூப்பர்கிங்சு அனைத்துலக சதுரங்க வாகையாளர் பட்டப் போட்டி ஆகிய போட்டிகளை வென்றார். நெதர்லாந்து நாட்டின் ஊகெவீன் நகரில் நடந்த மற்றொரு போட்டியில் கடைசி இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்த காரணத்தால் 6.5/9 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[7]

தொழில்முறை ஆட்டக்காரர்களுக்கான நிகழ்நேர விரைவு சதுரங்கப் போட்டியில் 2018 ஆம் ஆண்டு உலக வாகையாளர் மாக்னசு கார்லசனைத் தோற்கடித்தார்[8].

சதுரங்க விதிமுறைகளை மீறி செயற்பட்டார் என்ற காரணத்திற்காக எம். ஆர். லலித் பாபு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் தடைசெய்யப்பட்டார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Babu M R Lalith". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2014.
  2. "Lalith creates history at Chess Olympiad in Norway".
  3. chess24.com (9 November 2017). "Congratulations to GM Lalith Babu on winning the 55th Indian National Premier Chess Championship!".
  4. Administrator. "FIDE Title Applications (GM, IM, WGM, WIM, IA, FA, IO)" (en-gb).
  5. "Babu M.R. Lalith". Ratings.fide.com. பார்த்த நாள் 17 August 2014.
  6. "லலித் பாபுவுக்கு ஆந்திரா கிரிக்கெட் அமைப்பு உதவி". பார்த்த நாள் 12 செப்டம்பர் 2014.
  7. "Eindstand Open Groep 2016 | Hoogeveen Schaaktoernooi" (nl).
  8. League (PROChessLeague), PRO Chess. "Delhi Dynamite Defeat Magnus Carlsen And The Norway Gnomes, Qualify For Playoffs". Chess.com.
  9. "GM M R LALITH BABU (Federer999) - Chess Profile". Chess.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_பாபு&oldid=2959891" இருந்து மீள்விக்கப்பட்டது