ர. பிரக்ஞானந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். பிரக்ஞானந்தா
R. Praggnanandhaa
TataSteelChess2019-3.jpg
2019 டாட்டா சதுரங்கப் போட்டியில் பிரக்ஞானந்தா
முழுப் பெயர்ரமேசுபாபு பிரக்ஞானந்தா
நாடுஇந்தியா
பிறப்பு10 ஆகத்து 2005 (2005-08-10) (அகவை 17)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டம்கிரான்ட்மாசுட்டர் (2018)
பிடே தரவுகோள்2612 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2642 (மே 2022)

ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa; பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க கிராண்ட்மாசுட்டர் ஆவார்.சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, சேர்ஜே கார்ஜக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் பின்னர் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார்.[1][2] இவர் 2022 பெப்ரவரி 22 இல், தனது 16-வது அகவையில், நடப்பு உலக வாகையாளரான மாக்னசு கார்ல்சனை வென்ற வயதில் குறைந்த சதுரங்க வீரரானார்.[3] 2022 மே 20 இல், மீண்டும் கார்ல்சனை வென்றார்.[4][5] இவருக்கு 2022இல் இந்திய அரசின் அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.[6]

பிரக்ஞானந்தா 2013இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்றார். 2016 இல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், வரலாற்றில் மிக இளைய அனைத்துலக சதுரங்க மாஸ்டரானார்.[7] அங்கேரியின் பிரபல சதுரங்க வீராங்கனை ஜூடித் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்து இச்சாதனையைப் புரிந்தார். 2018 சூன் 23 இல் இத்தாலியில் நடைபெற்ற இளையோர்க்கான சதுரங்கப் போட்டியில், கிராண்ட்மாஸ்டர் மோரோனி லூக்காவை வீழ்த்தி, தமது 12 ஆண்டு, 10 மாத அகவையில் சேர்ஜே கார்ஜக்கினுக்குப் பின் இளையோர்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.[8][9][10] உலகின் 16 முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் அதிவிரைவு இணையவழி சதுரங்கப்போட்டியில் 8 ஆவது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான நார்வேயைச் சார்ந்த மாக்னசு கார்லசனைத் தோற்கடித்தார்.[11]

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் என்ற சதுரங்கப்போட்டியில் 2022 மே மாதம் 22 ஆம் நாள் மேக்னசு கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "GM Abhimanyu Mishra is the Youngest GM in History!". USCF Online. 30 June 2021.
 2. "Chennai's Praggnanandhaa becomes 2nd youngest GM". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/chess/chennais-praggnanandhaa-becomes-2nd-youngest-gm/articleshow/64715771.cms. 
 3. Indian teenager Praggnanandhaa beats world chess champion Carlsen, www.aljazeera.com
 4. "India's R Praggnanandhaa stuns World Champion Magnus Carlsen for second time in year". ANI. 21 May 2022. 21 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
 5. "பிரக்ஞானந்தா: இரு முறை மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியவரின் சிறப்பு என்ன?". BBC News தமிழ். 2022-06-01 அன்று பார்க்கப்பட்டது.
 6. "சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது: தமிழகத்தின் இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது : ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்". தின பூமி. 2022-12-01 அன்று பார்க்கப்பட்டது.
 7. [1]
 8. "Praggnanandhaa becomes India's youngest Grandmaster" (in en). ESPN. http://www.espn.in/chess/story/_/id/23887946/india-praggnanandhaa-becomes-world-second-youngest-grandmaster-12-years-10-months-13-days?platform=amp. 
 9. செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன்
 10. பிரக்ஞானந்தா: 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னை சிறுவன் ர. பிரக்ஞானந்தாவின் புதிய சாதனை
 11. "நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய இந்திய வீரர் பிரஞ்ஞானந்தா". www.dinakaran.com. 2022-02-24 அன்று பார்க்கப்பட்டது.
 12. Rakesh Rao (25 May 2022). "Chessable Masters: Praggnanandhaa shocks Anish Giri, meets Ding Liren in final". தி இந்து.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ர._பிரக்ஞானந்தா&oldid=3614813" இருந்து மீள்விக்கப்பட்டது