இலியோன் லூக் மெந்தோங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலியோன் லூக் மெந்தோங்கா
Leon Luke Mendonca
Mendonca,Leon Luke 2019 Karlsruhe.jpg
2019 ஆம் ஆண்டில் இலியோன் லூக் மெந்தோங்கா
பிறப்பு13 மார்ச்சு 2006 (2006-03-13) (அகவை 17)
கோவா (மாநிலம்), இந்தியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2021)
பிடே தரவுகோள்2536 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2557 (சூலை 2021)

இலியோன் லூக் மெந்தோங்கா (Leon Luke Mendonca) இந்தியாவைச் சேர்ந்த ஓர் சதுரங்க வீரர் ஆவார். 2006 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கிராண்டுமாசுட்டர் பட்டத்திற்கு தகுதி பெற்ற அறுபத்தேழாவது இந்தியர் என்று அறியப்படுகிறார். 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் பிடே அமைப்பு இவருக்கு இத்தகுதியை வழங்கியது.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

மெந்தோங்கா 2019 ஆம் ஆண்டு 12 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 3 நாட்கள் என்ற வயதில் பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் என்ற தகுதியைப் பெற்றார்.[1] 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கிழக்கு ஐரோப்பாவில் சிக்கிக் கொண்டார். 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அங்கேரியில் நடந்த ரிகோ சதுரங்க கிராண்டுமாசுட்டர் போட்டியில் இவர் தனது முதல் கிராண்டுமாசுட்டர் தகுதி நிலையை அடைந்தார். அடுத்த 21 நாட்களுக்குள், புடாபெசுட்டில் நடைபெற்ற மற்றொரு கிராண்டுமாசுட்டர் போட்டியில் வென்று இரண்டாவது கிராண்டுமாசுட்டர் தகுதிநிலையையும் அடைந்தார்.[2] மெந்தோங்கா தனது மூன்றாவது மற்றும் இறுதி கிராண்டுமாசுட்டர் தகுதிநிலையை 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இத்தாலியின் பசானோ டெல் கிரப்பா வெர்கானி கோப்பை சதுரங்கப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[3][4] இதன் மூலம் 14 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 17 நாட்களில் கிராண்டு மாசுட்டர் பட்டம் வென்று சாதனை படைத்த அனுராக் மமாலைத் தொடர்ந்து கிராண்டுமாசுட்டர் பட்டம் வென்ற இரண்டாவது கோவா மாநில சதுரங்க வீரர் என்ற பெருமைக்கு உரியவரானார். மெந்தோங்காவிற்கு அதிகாரப்பூர்வமாக கிராண்டுட்மாசுட்டர் என்ற பட்டம் 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pinto, Basil Sylvester (2 July 2019). "I want to be a GM as soon as possible: Leon Luke Mendonca". ChessBase India. https://www.chessbase.in/news/I-want-to-be-a-GM-as-soon-as-possible-Leon-Luke-Mendonca. 
  2. "Leon Mendonca wins in Hungary, earns second GM norm in space of 21 days". The Indian Express. Press Trust of India. 18 November 2020. https://indianexpress.com/article/sports/chess/young-indian-player-leon-mendonca-wins-in-hungary-earns-second-gm-norm-7056331/. 
  3. "Goa's 14-year-old Leon Mendonca becomes India's 67th Grandmaster". Sportstar. Press Trust of India. 31 December 2020. https://sportstar.thehindu.com/chess/indian-chess-news-goas-14-year-old-leon-mendonca-becomes-indias-67th-grandmaster/article33461829.ece. 
  4. Prasad, RS (31 December 2020). "Leon becomes India's 67th Grandmaster". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/chess/leon-becomes-indias-67th-grandmaster/articleshow/80041148.cms. 
  5. "Title Application" (PDF). fide.com. FIDE. 27 January 2021 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]