உள்ளடக்கத்துக்குச் செல்

பூ. ச. குமாரசுவாமி ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.எஸ்.குமாரசுவாமிராஜா
சென்னை மாநில முதலமைச்சர்
பதவியில்
26 ஜனவரி 1950 – ஏப்ரல் 10, 1952
ஆளுநர்கிருஷ்ண குமாரசிங் பவசிங்
முன்னையவர்பதவி உருவாக்கபட்டது
பின்னவர்சி. இராஜகோபாலாச்சாரி
சென்னை மாகாண முதல்வர்
பதவியில்
ஏப்ரல் 6, 1949 – 26 ஜனவரி 1950
ஆளுநர்கிருஷ்ண குமாரசிங் பவசிங்
முன்னையவர்ஓ. பி. ராமசாமி ரெட்டியார்
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
ஒரிசா மாநில ஆளுநர்
பதவியில்
1954–1956
முன்னையவர்சையிது பாசில் அலி
பின்னவர்பீம் சென் சச்சார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1898
இராஜபாளையம், சென்னை மாகாணம் இந்தியா இந்தியா
இறப்பு1957
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரஸ்

பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா (8 ஜூலை 1898 – 16 மார்ச் 1957) சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்பேற்றவர்.[1]. அவர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராசப்பாளையத்தில் பிறந்தவர்.

இளமை வாழ்வு

[தொகு]

பூசாபதி சஞ்சீவி ராஜாவிற்கு மகனாக இராசப்பாளையத்தில் பிறந்தார். அவரது அன்னையை எட்டு நாட்களிலேயே இழந்தார். தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார்.உடன்பிறப்புகள் யாருமில்லாத குமாரசாமியை அவரது பாட்டியார் வளர்த்து வந்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்த வீரர்கள் பரம்பரையைச் சேர்ந்த ராஜூக்களின் இனத்தைச் சேர்ந்தவர்.[2] தமது பள்ளிக்கல்வியை முடித்தவுடன் இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசில் இணைந்து பல்வேறு நிலைகளில் பங்காற்றி இருக்கிறார். கிராமத்தின் பஞ்சாயத்து அமைப்புகளில் நாட்டம் கொண்டு பஞ்சாயத்து மற்றும் நகரவை நிர்வாகங்களில் பங்கேற்றார்.

அரசியல் மற்றும் சமூக சேவை

[தொகு]

அவரது இளம்வயதில் அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரது வாழ்வும் எழுத்துக்களும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருந்தன. 1919ஆம் ஆண்டு முதன்முதலாக மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார்.காந்தியின் தென்னாபிரிக்கா போராட்டங்களையும் அகமதாபாத்தில் அவர் நிறுவிய ஆசிரமும் அவரது எளிமையும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.

1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி,மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.

1949 முதல் 1952 வரை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முதலமைச்சராகவும் 1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார்.அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு,காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன.தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்தார்.

நினைவுச் சின்னங்கள்

[தொகு]

இவரது நினைவைப் போற்றும் வகையில் இந்திய நடுவணரசு இவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட நகருக்கும் இவர் பெயரைச் சூட்டியுள்ளனர்.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Government of Tamil Nadu — Chief Ministers of Tamil Nadu since 1920
  2. "Ancestors were Telugu kshatriya Rajus". Archived from the original on 2008-03-17. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.

வெளியிணைப்புகள்

[தொகு]
முன்னர் சென்னை மாகாண முதலமைச்சர்கள்
6 ஏப்ரல் 1949– 26 ஜனவரி 1950
பின்னர்
பி. எஸ். குமாரசுவாமிராஜா
முன்னர்
புதிய பதவி
சென்னை மாகாண முதலமைச்சர்கள்
26 ஜனவரி 1950– 10 ஏப்ரல் 1952
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._ச._குமாரசுவாமி_ராஜா&oldid=3943992" இலிருந்து மீள்விக்கப்பட்டது