ஜெமினி ஸ்டூடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெமினி ஸ்டுடியோஸ்
வகைவரையறுக்கப்பட்டது
நிறுவுகை1940
நிறுவனர்(கள்)எஸ். எஸ். வாசன்
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
கேரளா
பாலிவுட்
ஆந்திரப் பிரதேசம்
தொழில்துறைதிரைப்படம்

ஜெமினி ஸ்டுடியோஸ் (Gemini Studios) எனும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் எஸ். எஸ். வாசனால் 1940-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் வாசன் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக அவர் வளர்த்த குதிரையின் பெயரான ஜெமினியே இப்படப்பிடிப்பு அரங்கிற்கும் சூட்டப்பட்டது[1]. சென்னையில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எஸ். எஸ். வாசன் தனது நண்பரான சுப்ரமணியமிடமிருந்து இதை வாங்கிப் பின்னர் ஜெனிமி ஸ்டுடியோஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்[2].

இவரின் மறைவிற்குப் பின் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு 'த பார்க்' (The Park, Chennai) என்ற சொகுசு விடுதியாக மாற்றப்பட்டது[3] .

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினி_ஸ்டூடியோஸ்&oldid=2186692" இருந்து மீள்விக்கப்பட்டது