முகலாய ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
17ஆம் நூற்றாண்டைச் சேந்த ஒரு முகலாய ஓவியம்

.

முகலாய ஓவியம் (Mughal painting) என்பது, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 19 ஆம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசுக் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன.

தோற்றம்[தொகு]

இரண்டாவது முகலாயப் பேரரசனான ஹுமாயூன், தப்ரீசில் இருந்தபோது, அவருக்குப் பாரசீக ஓவியங்கள் அறிமுகமானது. ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது, பாரசீக ஓவியப் பாணியில் திறமை பெற்ற இரண்டு ஓவியர்களையும் அழைத்து வந்தார். இவர்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமான இப் பாணி, பின்னர் உள்ளூர்ப் பாணிகளுடனும் கலந்து முகலாயப் பாணி எனப்பட்ட புதிய பாணியொன்றை உருவாக்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலாய_ஓவியம்&oldid=2584246" இருந்து மீள்விக்கப்பட்டது