குரு தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு தத்
Guru Dutt Edit on Wikidata
பிறப்பு9 சூலை 1925
பெங்களூர்
இறப்பு10 அக்டோபர் 1964 (அகவை 39)
மும்பை
படித்த இடங்கள்
  • Hare School
பணிதிரைப்பட நடிகர்
வாழ்க்கைத்
துணை/கள்
கீதா தத்

குருதத் என்றறியபட்ட வசந்த் குமார் சிவசங்கர் படுகோனே (9 ஜூலை 1925 - 10 அக்டோபர் 1964), ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். 1950 மற்றும் 1960 களின் பியாஸா, ககாஸ் கே பூல் , சாஹிப் பீபி அவுர் குலாம், சௌத்வின் கா சாண்ட் போன்ற சோகத்தைப் பிழியும் படங்களை உருவாக்கினார். குறிப்பாக, அமெரிக்காவின் டைம் இதழ் "அனைத்து காலத்துக்குமான" 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில்[1] பிரபல பிரித்தானிய திரைப்பட இதழான சைட் அண் சவுண்ட் இதழ் 2002 இல் இயக்குநர்கள், விமர்சகர்கள் போன்றோரிடம் நடத்திய வாக்கெடுப்பு போன்றவற்றால், பியாசா மற்றும் காகாஸ் கே பூல் போன்ற திரைப்படங்கள் எல்லா காலத்துக்க்மான திரைபடங்கள் பட்டடியலில் இடம்பெற்றன.[2] எல்லா காலத்திலும் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் தத் சேர்க்கப்படுகிறார்.[3]

2010 ஆம் ஆண்டில், சி.என்.என் தொலைக்காட்சி "எல்லா காலத்திற்குமான சிறந்த 25 ஆசிய நடிகர்கள்" பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டார்.[4] சொந்த வாழ்கையின் சோகங்களால் தற்கொலை செய்து கொண்டார்

பிறப்பும் ,வளர்ப்பும்[தொகு]

குருதத் தின் இயற்பெயர், வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. தந்தை சிவசங்கர் ராவ் படுகோனே விற்கும் தாய் வசந்தி படுகோனேவிற்கும் மைசூரில் 1925 ஜூலை 9 இல் பிறந்தார் . தந்தை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆகவும், தாய் குடும்பத்தை பராமரித்தும் வந்தார் .தாயார் கொஞ்சம் எழுத்தாற்றல் கொண்டவர். இவருடன் ஆத்மராம், தேவிதாஸ் ஆகியோர் உடன் பிறந்தவர்கள். உடன் பிறந்த தங்கை லலிதா லாஜ்மி. லலிதா மகள் கல்பனா லாஜ்மி என்ற சினிமா பட இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. சிறு வயதில் பெற்றோருடன் பிணக்கு கொண்டு கல்கத்தாவிற்கு சென்று ஆரம்ப கல்வியை அங்கேயே கற்றார். சிறந்த மாணவராகத் திகழ்ந்தாலும் பொருளாதார நிலை காரணமாக கல்லூரி செல்ல முடியவில்லை. 16 வயதில் வருடம் 75 ரூபாய் உதவித் தொகை பெற்று, இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் அல்மோராவில் நடத்தி வந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நடனம், நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் 5 வருடங்கள் பயிற்சி பெற்றார்.

சினிமா மோகமும் ,வாழ்க்கையும்[தொகு]

1944 இல் தொலைபேசி ஆபரேட்டர் வேலை கிடைத்ததை உதறி தள்ளினார் .. 1944-ல் புனேயில் உள்ள பிரபாத் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். சிறிய வேடங்களில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் தேவ் ஆனந்த், ரஹ்மான் ஆகியோரின் நட்பு இவருக்குக் கிடைத்தது. ‘1947 இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் சிறு கதைகள் எழுதினார். அந்த சமயத்தில்தான் புகழ்பெற்ற ‘ப்யாஸா’ திரைப்படத்தின் கதையை எழுதினார். கஷ்மகஷ் என்ற பெயரில் இவர் எழுதிய இந்தக் கதை திரைப்படத்துக்காக ‘ப்யாஸா’ என்று மாற்றி அமைக்கப்பட்டது.

ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். 1957-ல் வெளிவந்து அபார வெற்றி பெற்ற ‘ப்யாஸா’ இவரது தலைசிறந்த படைப்பு என்று புகழப்பட்டது. இவரது திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றன. 50-க்கும் குறைவான திரைப்படங்களையே தயாரித்தாலும் இவை பாலிவுட்டின் பொற்காலத் திரைப்படங்களாகக் கருதப்படுகின்றன. இவரது ‘ப்யாஸா’ மற்றும் ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படங்கள் அமெரிக்காவின் டைம்ஸ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இதழ்கள் தனித்தனியே வெளியிட்ட சிறந்த 100 படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றன. 1959-ல் வெளிவந்த இவரது ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு படங்களை இயக்கவில்லை.

சொந்த வாழ்க்கை[தொகு]

புகழ்பெற்ற பின்னணி பாடகி கீதா தத்தை மூன்றாண்டுகளாய் காதலித்து வந்தார் . நிச்சயதார்த்தம் நடந்த நிலையிலும் கீதாவின் குடும்ப எதிர்ப்பு இருந்து வந்தது .1953 ஆம் ஆண்டில் கீதாராய்சவுதரியை மணந்தார்,

குருதத் ஒரு மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையை கொண்டிருந்தார். சினிமா வேலை சம்பந்தமாக ஒரு கடுமையான ஒழுக்கநெறியாளர் இருந்தார், ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் முற்றிலும் ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்ந்தார் . திருமணத்திற்கு முன்னரே வஹீதா ரஹ்மானுடன் தொடர்பில் இருந்ததும் இவரது திருமணம் தடைபட்டதற்கு ஒரு காரணம் ஆகும் .திருமணத்திற்கு பின்பும் இந்த தொடர்பு நீடித்ததால்தான், இவரது மனைவி கீதா இவரை விட்டு நீங்கினார். மித மிஞ்சிய புகை பிடித்தலும், மிதமிஞ்சிய குடிப்பழக்கமும் இவரது ஆயுளை குறைக்க செய்தது. எவ்வளவு நெருக்கமான நண்பராக இருந்தாலும், சொந்த விஷயங்களை ஒரு போதும் வெளியிடாதவர். குருதத் சொந்த வாழ்வில் பல துயரங்களால் அவதியுற்று ஒன்றிரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஒருமுறை இவரை காப்பாற்றியது இவரது நண்பர், தேவ் ஆனந்த். இந்தியாவின் துன்பவியல் சினிமாக்களின் நாயகனாக அறியப்படுபவரான குருதத், 1964-ல் 39-ம் வயதில் தற்கொலை செய்துகொண்டார். இவர் இறந்த பின் இவர்களின் பிள்ளைகள் தருண், அருண், நீனா குரு தத்தின் சகோதரர் ஆத்மராம் வீட்டிலும், கீதா தத்தின் சகோதரர் வீட்டிலும் வளர்ந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Complete List பரணிடப்பட்டது 14 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்." All-Time 100 Movies Time Magazine. 2005
  2. "2002 Sight & Sound Top Films Survey of 253 International Critics & Film Directors". Cinemacom. 2002. Archived from the original on 31 May 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  3. Lee, Kevin (5 September 2002). "A Slanted Canon". Asian American Film Commentary. Archived from the original on 31 May 2012. பார்க்கப்பட்ட நாள் 24 April 2009.
  4. "Big B in CNN's top 25 Asian actors list". Press Trust of India. New York. 5 March 2010. Archived from the original on 1 November 2011. பார்க்கப்பட்ட நாள் 15 April 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_தத்&oldid=3336266" இலிருந்து மீள்விக்கப்பட்டது