நவீன நடனம்
Appearance

நவீன நடனம் எனப்படுவது 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்குலகில் வளர்ந்த நடனப் பாணி ஆகும். மேற்குநாட்டு செவ்வியல் நடனத்துக்கு (Ballet) எதிர் வடிவமாக இந் நடனம் தோன்றியது. செவ்வியல் நடனத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய நுணுக்கங்களை,அணிகலன்கள், காலணிகள் விலக்கி, படைப்பாற்றல் மிக்க தனி மனித வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்து இந்நடனம் வளர்ந்தது.