ஆனந்த சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனந்த சங்கர்br>আনন্দ শঙ্কর
இயற்பெயர்ஆனந்த சங்கர்
பிறப்பு11 திசம்பர் 1942
அல்மோரா, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு26 மார்ச்சு 1999(1999-03-26) (அகவை 56)
இந்தியா
இசை வடிவங்கள்உலக இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர், பாடகர், இசையமைப்பாளர்

ஆனந்த சங்கர் (Ananda Shankar) (11 டிசம்பர் 1942 - 26 மார்ச் 1999) ஒரு பெங்காலி இசைக்கலைஞரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர், மேற்கத்திய மற்றும் கிழக்கிசைபாணிகளை இணைப்பதில் மிகவும் பிரபலமானவர். [1] இவர் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான தனுசிறீ சங்கர் என்பவரை மணந்தார்.

வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அல்மோராவில் பிறந்த இவர், பிரபல நடனக் கலைஞர்களான அமலா சங்கர் மற்றும் உதய் சங்கர் ஆகியோரின் மகனாவார். சித்தார் கலைஞர் ரவி சங்கர் இவரது உறவினராவார். குவாலியரின் சிந்தியா பள்ளியில் படித்தார். ஆனந்த் தனது மாமாவிடம் இருந்து சித்தாரைக் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இலால்மணி மிசுராவிடம் படித்தார். இவர் கொல்கத்தாவில் மார்ச் 26, 1999 அன்று தனது 56 வயதில் மாரடைப்பு காரணமாக இறந்தார். [2]

தொழில் வாழ்க்கை[தொகு]

1960களின் பிற்பகுதியில், ஆனந்த் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குச் சென்று, அங்கு ஜிமி ஹென்றிக்ஸ் உட்பட பல சமகால இசைக்கலைஞர்களுடன் நிகழ்ச்சிகளை வழங்கினார். அங்கு இவர் ரெப்ரைஸ் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யபட்டார். மேலும் "ஆனந்த சங்கர்" என்ற தனது முதல் இசைத் தொகுப்பை 1970 இல் வெளியிட்டார். இந்திய பாரம்பரிய இசையுடன் சித்தார் கருவி அடிப்படையில் இது அமைந்திருந்தது. த ரோலிங் ஸ்டோன்ஸ், "ஜம்பின் ஜாக் ஃப்ளாஷ்", தி டோர்ஸ், "லைட் மை ஃபயர்" போன்ற பிரபல இசைத் தொகுப்புகளிலும் பணியாற்றினார். இவை அனைத்தும் "1001 ஆல்பம்ஸ் யு மஸ்ட் ஹியர் பிபோர் யு டை" என்ற புத்தகத்தில் இடம் பெற்றது.

இசைத் தொகுப்புகள்[தொகு]

 • Ananda Shankar, 1970 (LP, Reprise 6398; CD, Collectors' Choice CCM-545)
 • Ananda Shankar and His Music, 1975 (EMI India)
 • India Remembers Elvis, 1977 (EP, EMI India S/7EPE. 3201)
 • Missing You, 1977 (EMI India)
 • A Musical Discovery of India, 1978 (EMI India)
 • Sa-Re-Ga Machan, 1981 (EMI India)
 • 2001, 1984 (EMI India)
 • Temptations, 1992 (Gramaphone Company of India)
 • Ananda Shankar: Shubh – The Auspicious, 1995
 • Ananda, 1999 (EMI India)
 • Arpan, 2000 (EMI India)
 • Walking On, 2000 (Real World 48118-2, with State of Bengal)
 • Ananda Shankar: A Life in Music – The Best of the EMI Years, 2005 (Times Square TSQ-CD-9052)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 8 February 2007 அன்று பரணிடப்பட்டது.
 2. Haresh Pandya (27 April 1999). "Obituary : Ananda Shankar".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_சங்கர்&oldid=3163061" இருந்து மீள்விக்கப்பட்டது