ஜிமி ஹென்றிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிமி ஹென்றிக்ஸ்

பெப்ரவரி 18, 1969ல் ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் ஹென்றிக்ஸ்.
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஜோனி அலன் ஹென்றிக்ஸ்
பிறப்பு நவம்பர் 27, 1942(1942-11-27)


சியாட்டில், வாஷிங்டன், ஐஅ

இறப்பு செப்டம்பர் 18, 1970 (அகவை 27)
இலண்டன், இங்கிலாந்து
இசை வகை(கள்) Hard rock, blues-rock, அமிலப் பாறை, psychedelic rock
தொழில்(கள்) இஐக் கலைஞர், பாடலாசிரியர், producer
இசைக்கருவிகள் கிட்டார், பாடுதல்
இசைத்துறையில் 1962–1970
வெளியீடு நிறுவனங்கள் RSVP, Track, Barclay, Polydor, Reprise, Capitol, MCA
Associated acts The Jimi Hendrix Experience, Gypsy Sun and Rainbows, Band of Gypsys, The Isley Brothers, Little Richard, Curtis Knight and the Squires
வலைத்தளம் www.jimihendrix.com
குறிப்பிடத்தக்க கருவி(கள்)
Fender Stratocaster
Gibson Flying V

ஜிமி ஹென்றிக்ஸ் (Jimi Hendrix) எனப்படும் ஜேம்ஸ் மார்ஷல் ஹென்றிக்ஸ் (James Marshall Hendrix, நவம்பர் 27, 1942செப்டெம்பர் 18, 1970) ஒரு அமெரிக்க கிட்டார் கலைஞரும், பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். இவரது கிட்டார் வாசிப்பு ராக் இசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துயது. ஐரோப்பாவில் இவ்ருக்குக் கிடைத்த தொடக்க வெற்றிகளுக்குப் பின்னர் 1967 ஆம் ஆண்டில் மான்டரி பாப் விழாவில் இடம்பெற்ற இவரது நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவிலும் பெரும் புகழ் பெற்றார். 1969 இன் வூட்ஸ்டாக் விழாவிலும் (Woodstock Festival) இவருக்கு முக்கிய இடம் கிடைத்தது.

ஹென்றிக்ஸ், உருத்திரிபுப் பெருக்கியுடனான (overdriven amplifiers) கிட்டார் பின்னூட்ட (guitar feedback) நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உதவினார். இவர் புளூஸ் இசைக் கலைஞர்களான பி. பி. கிங், மடி வாட்டர்ஸ், ஹவ்லின் வூல்ஃப், ஆல்பர்ட் கிங், எல்மோர் ஜேம்ஸ் ஆகியோரிதும், ரிதம் அண்ட் புளூஸ் இசையினதும், சோல் கிட்டார் கலைஞர்களான கர்ட்டிஸ் மேஃபீல்ட், ஸ்டீவ் குரொப்பர் ஆகியோரினதும், ஓரளவு நவீன ஜாஸ் இசையினதும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார். கார்லோஸ் சன்டானா, ஹென்றிக்சின் இசையில் தாயக அமெரிக்கப் பாரம்பரியத்தின் தாக்கம் இருக்கக்கூடும் எனக் கருதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிமி_ஹென்றிக்ஸ்&oldid=1828290" இருந்து மீள்விக்கப்பட்டது