ஐக்கிய முன்னணி (இந்தியா)
Jump to navigation
Jump to search
ஐக்கிய முன்னணி (United Front) என்பது (1996-1998) காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதிமூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த தேவகவுடா மற்றும் ஐ. கே. குஜரால் ஆகியோர் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இக்கூட்டணியின் கூட்டுனராக (convener) இருந்தார்.
கூட்டணி வரலாறு[தொகு]
- 1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால். தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பல கட்சிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கியிருந்தனர். இடது முன்னணியும் இதில் இடம் பெற்றிருந்தது.
- இத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால். ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணியில் 192 மக்களவை உறுப்பினர்களை கொண்டிருந்தது. அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் இடதுசாரிகட்சிகள் இணைந்து அம்முன்னணிக்கு ஆதரவளித்தது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்க ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்தது பிரதமராக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தேவ கவுடா பொறுப்பேற்றார்.
- ஆனால் அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் சீதாராமன் கேசரி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். தேவ கவுடா பிரதமர் பதவியில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலகினார்.
- பின்பு 1997ல் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஐ. கே. குஜ்ரால் பிரதமரானார். ஆனால் ஐ. கே. குஜ்ரால் பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சிசின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் அறிக்கை வெளிவந்ததால். அதில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணம் தமிழகத்தை சேர்ந்த திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டு இருந்தது.
- ஆனால் ஒரே வருடத்தில் ஜனதா தளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தை சேர்ந்த திமுக கட்சியினரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறியதால்.
- பிரதமர் ஐ. கே. குஜ்ரால் ஜெயின் கமிஷன் அறிக்கையில் முகாந்திரம் இல்லாமல் திமுகவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற மறுத்ததால். ஜனதா தளம் கட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் ஜனதா தளம் ஆட்சி இரண்டே வருடங்களில் கவிழ்ந்தது. அத்தோடு ஐக்கிய முன்னணியும் கலைந்தது.