ஜவாஹிருல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மு. ஹி. ஜவாஹிருல்லா
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2016
தொகுதி இராமநாதபுரம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 22, 1959 (1959-07-22) (அகவை 58)
உடன்குடி, தூத்துக்குடி
அரசியல் கட்சி மனிதநேய மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) நிறைவுமுசீரா
பிள்ளைகள் 1மகள்
இருப்பிடம் சென்னை
சமயம் இசுலாம்

முனைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா (M. H. Jawahirullah) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவராவார். தற்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் (காலன்குடியிருப்பில்) பிறந்தவர். இவர் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். 1985 முதல் கல்லூரி பேராசிரியராக, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுரியில் வணிகவியல்துறையில் பணியாற்றி 2009ல் விருப்பஓய்வு பெற்றார்.


1996 முதல் 28-01-2012 வரை தமுமுகவின் தலைவராக இருந்தவர். .தற்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சட்டமன்றத்திற்கான 2011 தேர்தலில் இராமநாதபுரத்திலிருந்து மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பொது வாழ்க்கை[தொகு]

ஐநா சபையில் உரையாற்றியவர். மலேஷியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சென்று பல பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டவர்.

வழக்கும் தண்டனையும்[தொகு]

வெளிநாடுகளிலிருந்து சட்டத்திற்கு மாறாக பணம் பெற்ற வழக்கில் 2011 ஆம் ஆண்டு இவர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில் ஜவாஹிருல்லாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை மத்தியப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த போது ஜவாஹிருல்லாவின் ஓராண்டுத் தண்டனையை நீதி மன்றம் உறுதி செய்தது.[2][3][4] பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஐவர் முறையீடு செயததின் பேரில் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.[5] [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile". தமிழ்நாடு சட்டமன்றம். மூல முகவரியிலிருந்து 6 பெப்ரவரி 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 நவம்பர் 2016.
  2. "வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html". ஒன் இந்தியா இணையத்தளம். பார்த்த நாள் 19 சூன் 2017.
  3. "ஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி". தினமலர் இணையத்தளம். பார்த்த நாள் 19 சூன் 2017.
  4. "வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html". ஒன் இந்தியா இணையத்தளம். பார்த்த நாள் 19 சூன் 2017.
  5. "ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.". தினத்தந்தி. பார்த்த நாள் ௦01 சூலை 2017.
  6. "ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் தண்டனைநிறுத்தி வைப்பு.". தினமணி. பார்த்த நாள் ௦01 சூலை 2017.
  7. "மனித நேய மக்கள் கட்சி தலைவரின் தண்டனை நிறுத்தி வைப்பு". தினமலர். பார்த்த நாள் 01 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவாஹிருல்லா&oldid=2421545" இருந்து மீள்விக்கப்பட்டது