பாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் விண் தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரும் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இவர் முதுநிலை கலை பட்டம் பெற்றவர். சென்னையில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர், தமுமுகவின் மாநில பொருளாளராக செயல்பட்டவர். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் சிலரோடு தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை நிறுவினார். பின்னர் அதிலிருந்து விலகி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை நிறுவி அதன் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கர்&oldid=2716154" இருந்து மீள்விக்கப்பட்டது