உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ். எம். பாக்கர் மற்றும் சிலர் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினர். பின்னர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு 16-01-2009 அன்று இந்திய தவ்ஹித் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பைத் துவங்கியுள்ளனர்.

அமைப்பின் கொள்கைள்

[தொகு]

1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.

2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.

3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.

4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்

5. ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டு செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.

அமைப்பின் நோக்கங்கள்

[தொகு]

1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.

2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.

3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.

அமைப்பின் செயல் திட்டங்கள்

[தொகு]

1. கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்துதல்.

2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.

3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.

4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.

5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.

6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.

7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.

8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.

9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.

10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.

12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.

13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.

14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.

15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.

16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது.

தற்போதைய நிர்வாகிகள்

[தொகு]

தலைவர்

  • எஸ்.எம்.பாக்கர்

துணைத் தலைவர்

  • எம்.ஐ.முஹம்மது முனிர்

பொதுச் செயலாளர்

  • ஏ.முஹம்ம்து சித்திக்

துணை பொதுச் செயலாளர்

முஹம்மது ஷிப்லி

பொருளாளர்

  • ஏ.பிர்தவ்ஸ்

அதிகாரப்பூர்வ வாரஇதழ்

[தொகு]
  • மக்கள் ரிப்போர்ட்

பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_தவ்ஹீத்_ஜமாஅத்&oldid=4034220" இலிருந்து மீள்விக்கப்பட்டது