பேச்சு:இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிபாயதுல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்டுரையில் நிர்வாகிகள் பெயர்கள் சரி. அவர்கள் தொலைபேசி எண்கள் தேவையா? --Theni.M.Subramani 17:19, 17 ஏப்ரல் 2010 (UTC)

முகவரி, தொலைப்பேசி எண் போன்ற தொடர்பு விவரங்களைக் கட்டுரையில் தவிர்க்க வேண்டும்--ரவி 19:19, 17 ஏப்ரல் 2010 (UTC)
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்டுரையில் இந்த அமைப்பு எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது? எங்கு தோற்றுவிக்கப்பட்டது என்கிற முன்னுரை எதுவுமில்லாமல் உள்ளதே. முன்னுரை எழுதப்படுமா? --Theni.M.Subramani 17:30, 17 ஏப்ரல் 2010 (UTC)

தவிர்க்கக்கூடிய விவரங்கள்[தொகு]

  • ஒரு அமைப்பின் மாநிலச் செயலாளர்கள் போன்றோர் அடிக்கடி மாறக் கூடியவர்கள். தலைவர் பெயரை மட்டும் குறிப்பிடுவது ஏற்புடையது.
  • //அமைப்பின் நோக்கங்கள்:

1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.

2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.

அமைப்பின் செயல்திட்டங்கள்:

கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.

2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.

3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.

4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.

5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.

6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.

7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.

8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.//

போன்ற பல செயல்பாடுகளும் பல நிறுவனங்களுக்கும் பொதுவானவை. இவற்றை ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையில் குறிப்பிடத் தேவை இல்லை.

அமைப்பின் பெயர், தோன்றிய ஆண்டு, தோன்றிய நோக்கம், தோற்றுவித்தவர், இதுவரை செய்த குறிப்பிடத்தக்க செயல்கள் ஆகியவற்றைச் சுருக்கமாக குறிப்பிட்டு மற்ற விவரங்களுக்கு வெளியிணைப்பில் நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு இணைப்பு தரலாம். தயவு செய்து இந்த ஆலோசனைகளைப் பொதுவாக ஒரு நிறுவனம் குறித்துக் கூறுவதாக கருத வேண்டுகிறேன். குறிப்பிட்ட அமைப்பு / சமயத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம். இங்கு நாம் மேற்கொள்ளும் உரையாடல் இது போன்ற கட்டுரைகளுக்கான பொதுவான வழிகாட்டலாக அமையச் செய்யலாம்--ரவி 19:19, 17 ஏப்ரல் 2010 (UTC)