பேச்சு:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கும் நடைக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. இதைத் திருத்தி எழுத வேண்டும். இதன் உள்ளடக்கத்தைக் கட்டுரைப் பக்கத்தில் இருந்து நீக்கி உரையாடல் பக்கத்தில் இட்டிருக்கிறேன். மயூரநாதன் 07:14, 1 மார்ச் 2008 (UTC)


[www.tmmk.in] வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!

ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன.

தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் லி இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.

இடஒதுக்கீட்டிற்கான உரிமைப் போராட்டங்கள்

சமுதாயத்தின் உரிமைப் போராட்டங்களில் ஒன்றான இடஒதுக்கீட்டிற்காக தமுமுக நடத்திவரும் அறப் போராட்டங்களை சமுதாயம் பெருமையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

1995லில் சென்னை இம்பீரியல் வளாகத்தில் கோரிக்கை மாநாடு

1999 ஜூலையில் சென்னையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு

2004 மார்ச்சில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தஞ்சையை திணறடித்த கோரிக்கை பேரணி


தஞ்சை பேரணியில் திறண்ட மக்கள் வெள்ளம்

2004 ஆகஸ்ட்டில் இடஒதுக்கீடு கேட்டு தடையை மீறி நடந்த முதல்வர் வீடு முற்றுகைப் போர்


முதல்வர் வீடு முற்றுகைப் போர்

பத்தாண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் மேடை பிரச்சாரம்

என முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை அரசியல் விவாதமாக மாறியதற்கு இப்போராட்டங்களே காரணம் என்பதை பணிவன்போடு குறிப்பிடுகிறோம்.

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டங்கள்

1992 டிசம்பர் 6லில் பாபரி மஸ்ஜித் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தேசமே பீதியில் ஆழ்ந்தது. முஸ்லிம்கள் மீண்டும் அதே இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட வேண்டும் என்றனர். தமிழகத்தில் 1995லில் கழகம் தொடங்கப்பட்ட பிறகு சமுதாய மக்களை ஒருங்கிணைத்து வலுவான போராட்டங்களை தமுமுக நடத்தி வருகிறது.

1995லில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

1996லில் கவர்னர் மாளிகை முற்றுகை லி கைது

1997லில் சென்னையில் தடையை மீறி பேரணி. ஆயிரக்கணக்கானோர் கைது.

1998லில் மதுரையில் கோரிக்கைப் பேரணிக்கு அனுமதி மறுத்த முதல்வரைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகைப் போர். ஆயிரக்கணக்கானோர் கைது.

1999லில் சென்னை, மயிலாடுதுறை, மதுரை, திருநெல்வேலி, மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தர்ணா

2000, 2001 மற்றும் 2003லிஆண்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி ஆர்ப்பாட்டம்

2002லில் மாபெரும் சுவரொட்டி, துண்டுப் பிரசுர பிரச்சாரம்

தமிழகத்திலும் லி தலைநகரத்திலும்

2004 லில் தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களிலும், பெரு நகரங்களிலும் தடையை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதாயினர்.

டிசம்பர்லி6, 2004, டில்லி போராட்டம்


1) போராட்டத்தில் ஆதரவளித்த அரசியல் பிரமுகர்களுடன் தமுமுக தலைவர் 2) டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட தமுமுக தொண்டர்கள்

ஒருபுறம் கைதுகள் நடந்து கொண்டிருக்க மறுபுறம் இந்தியத் தலைநகர் டில்லியில் அதே டிசம்பர் 6 அன்று ஊர்வலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தமுமுக நடத்தியது. தமிழகத்திலிருந்து சொந்த செலவில் சென்ற தமுமுகவினரோடு, டில்லி முஸ்லிம்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை தமுமுக தலைவர் மற்றும் போராட்டக் குழுவினர் சந்தித்து பாபர் மசூதியை மீண்டும் அதேஇடத்தில் கட்டக் கோரி மனுவை கையளித்தனர்.

தமுமுகவின் டில்லி போராட்டம் அகில இந்திய அளவில் மீடியாக்களால் எடுத்து செல்லப் பட்டது. இதனால் டிசம்பர் 6 பற்றிய விழிப்புணர்ச்சி வட இந்தியாவில் பற்றிப் பரவியது.

என பாபர் மஸ்ஜித் நில மீட்பில், இந்தியாவுக்கே வழிகாட்டும் போராட்டங்களை நடத்திய ஒரே இயக்கம் இந்திய அளவில் தமுமுக மட்டுமே. போராட்டங்கள் பல வகை

தமிழக சிறைச் சாலைகளில் முஸ்லிம் கைதிகள் சட்டத்திற்குப் புறம்பாக வன்தாக்குதல்களுக்கு உள்ளானதைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி சிறையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கழகம் போர்க்குரல் எழுப்பியது.

தமிழக அரசால் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதைக் கண்டித்து கிறித்தவ, முஸ்லிம் மற்றும் தலித் அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து மாபெரும் ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், கண்டன பொதுக்கூட்டங்களையும் கழகம் நடத்தியது. இத்தகைய போராட்டங்களே அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு அடித்தளமாக அமைந்தது.

2001லில் ஆப்கானிஸ்தான் மீதும், 2003லில் ஈராக் மீதும் அமெரிக்க கூட்டணிப் படைகள் நடத்திய பயங்கரவாத யுத்தங்களைக் கண்டித்து பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களை நடத்தி, லட்சக்கணக்கான மக்களை போருக்கு எதிராக திரட்டிக் காட்டியது தமுமுக.

2002லில் குஜராத்தில் பாஜக முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற இனப்படுகொலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த மதபயங்கரவாதத்தைக் கண்டித்து ஆக்ரோஷமாக போராட்டங்களை கழகம் நடத்தியது. பல்வேறு சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மதவெறிக்கு எதிராக அவர்களையெல்லாம் அணி திரட்டியது.

1998லில் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டபோதும், 1997லில் கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், 2001லில் தப்லீக் பிரமுகர் அப்துல் ரஷீத் படுகொலை செய்யப்பட்டபோதும் பெரும் போராட்டங்களை கழகம் நடத்தியது.

வடமாநிலங்களில் கிறித்தவ கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டதையும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதையும் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி அனைவருக்கும் குரல் கொடுக்கும் இயக்கம் தமுமுக என்பதை நிலைநிறுத்தியது.

2000ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி ஜார்ஜ் என்பவன் எழுதிய கட்டுரையைக் கண்டித்து சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

2003 லிம் ஆண்டு ஈராக்கின் மீது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ஆக்கிரமிப்புப் படை யுத்தத்தை தொடங்கிய போது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தியது.

நிவாரண உதவிகள்

1997லில் கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களுக்காகவும், பாதிக்கப்பட்ட இதர மக்களுக்காகவும் இரண்டரை கோடி ரூபாயை நிவாரணமாக வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் பகிர்ந்தளித்தது. நிவாரணம் பெற்றவர்களில் அப்பாவி ஹிந்து சகோதரர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

1997லில் ஷஹீத் பழனிபாபா அவர்கள் கொல்லப்பட்டபோது நடைபெற்ற கலவரங்களில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்காக லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

1999லில் ஒரிஸ்ஸாவில் புயல் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது தமிழகம் முழுக்க துணிமணிகள் சேகரிக்கப்பட்டு ரயில் மூலம் அவை ஒரிஸ்ஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2001லில் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க 18 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டு பூகம்ப நிவாரண நிதிக்கு அது வழங்கப்பட்டது.

2002லில் குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் சுமார் 3500 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டு அன்ஜுமன்லிஇம்தாதுல்லிமுஸ்லிமீன் அமைப்பு மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

2003லில் பாபரி மஸ்ஜிதிற்காக நடைபெறும் வழக்கு செலவுக்காக 8 லட்ச ரூபாய் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டு பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவிடம் வழங்கப்பட்டது.

சுனாமி

2004 டிசம்பர் 26 அன்று ஆசிய கண்டத்தை உலுக்கிய சுனாமியால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது சில மணி நேரத்திற்குள்ளாக தமுமுகவின் தொண்டரணியினர் சென்னை தொடங்கி குளச்சல் வரை கடற்கரை பகுதிகளுக்கு அதிரடியாய் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் உணவு ஏற்பாடுகளையும் அரசாங்கத்தை முந்திக் கொண்டு செய்துகொடுத்தார்கள். எல்லா மத மக்களும் பாகுபாடின்றி தமுமுகவின் பணியால் பயனடைந்தனர்.


கடற்கரையில் ஒதுங்கிய பிணங்களை அரசு இயந்திரங்களும், காவல்துறையும், ராணுவமும் தொடத் தயங்கிய போது உயிரை பனையம் வைத்து அவற்றை அப்புறப்படுத்தியது தமுமுகவின் மகத்தான பணியாக அமைந்தது.


தமிழகம் முழுக்க பறந்த அளவில் தொடர்ச்சியாக சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட மிகப்பெரிய தொண்டு அமைப்பு தமுமுக மட்டுமே என்பதை மீடியாக்கள் பாராட்டின. இந்தியப் பிரதமர் குளச்சல் வந்திருந்தபோது தமுமுகவின் சுனாமி நிவாரணப் பணியைப் பற்றி டெல்லியிலேயே கேள்விப்பட்டதாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.