முரசொலி (திமுக இதழ்)
Appearance
முரசொலி (Murasoli) இரண்டாம் உலகப்போரின்போது மு.கருணாநிதியால் துவங்கப்பட்ட திராவிட இயக்கத் தமிழ் ஏடாகும். கருணாநிதியின் பன்முக எழுத்தாண்மைக்கு படியாகவும் வடிகாலாகவும் விளங்கி அவர் சார்ந்த இயக்கத்தின் கொள்கைகள், கருத்துகளைத் தாங்கி மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.
- தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்த இந்த இதழ் ஆகத்து 10,1942 அன்று கருணாநிதியின் 18வது அகவையில் வெளியானது.[1]
- 1944 வரை காகிதம் கிடைக்காது துண்டறிக்கையாகவே வெளிவந்து பின்னர் நிறுத்தப்பட்டது.
- மீண்டும் 1948ஆம் ஆண்டு புத்தாண்டில் சனவரி 14 முதல் பெரியார் ஆண்டு 69 எனக் குறிப்பிட்டு வார இதழாக திருவாரூரிலிருந்து வெளிவரத்தொடங்கியது. [2]
- 1954ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாகவே வெளிவரத் தொடங்கியது
- செப்டெம்பர் 17, 1960 அன்று முதல் நாளேடாக வெளிவரத் தொடங்கியது.
பவளவிழா 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 திகதி தமிழகத்தில் முரசொலி பத்திரிக்கையின் பவளவிழா நடைபெற்றன
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருநாவுக்கரசு (1998). திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை. நக்கீரன். p. 69.
- ↑ குடி அரசு 1948 - சனவரி - 24, பக்.14