நீட் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது அகில இந்திய அளவிலான, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ( அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.[1]

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசுதெரிவித்தது.[2][3][4][5][6]

தமிழகத்தின் நிலை[தொகு]

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.[7] இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.[8] செயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள்[9], இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.[10]. தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில்[11] தேர்வு நடத்தப்படும் என்று பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.[12] 2017 ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ச. அனிதா எனும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியற்கட்சிகள், சமுதாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.[13] 2018 ஆம் ஆண்டில் "நீட்" தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது.[14][15] 2018 ஆம் ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாநில அரசு நடத்திய 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.75 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.[16][17]

தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை[தொகு]

தற்போதைய (2018 ஆம் ஆண்டு) நடைமுறைப்படி, இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதிற்குள் மூன்று முறையும், மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இத்தேர்வை எழுத முடியும்.[18]

விமர்சனங்கள்[தொகு]

2017 ஆம் ஆண்டில் சுமார் 400 மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பென் மற்றும் 110 மாணவர்கள் பூஜ்ஜியம் , எதிர்மறை மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். [19][20][21]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://cbseneet.nic.in/cbseneet/Welcome.aspx
 2. "NEET exams in 8 languages". தி இந்து பிசினசு லைன். பார்த்த நாள் திசம்பர் 24, 2016.
 3. "Medical entrance test NEET to be held in 8 languages". டைம்சு ஆப் இந்தியா. பார்த்த நாள் திசம்பர் 24, 2016.
 4. "NEET-UG In 8 Languages From 2017-18: Health Ministry". பார்த்த நாள் திசம்பர் 24, 2016.
 5. "NEET 2017 to be held in 8 languages including Gujarati, Assamese, Tamil". பார்த்த நாள் திசம்பர் 24, 2016.
 6. Odia, Kannada added to NEET list after furore - Asian Age
 7. "Ensure NEET is not forced on TN even in future: Jaya writes to PM Modi". இந்தியன் எக்சுபிரசு. பார்த்த நாள் திசம்பர் 23, 2016.
 8. "NEET controversy strikes again, State Board students from Tamil Nadu move SC". பார்த்த நாள் திசம்பர் 23, 2016.
 9. "Tamil Nadu govt to tutor 10,000 students for NEET & JEE". தி டைம்சு ஆப் இந்தியா. பார்த்த நாள் திசம்பர் 23, 2016.
 10. "NEET nightmare haunts TN". பார்த்த நாள் திசம்பர் 23, 2016.
 11. "தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் "நீட்' தேர்வு". தினமணி. பார்த்த நாள் திசம்பர் 23, 2016.
 12. "நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு… தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்". ஒன் இந்தியா. பார்த்த நாள் திசம்பர் 23, 2016.
 13. "நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை". தி இந்து. பார்த்த நாள் செப்டம்பர் 4, 2017.
 14. http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44921-neet-constraints-special-articles.html
 15. https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-students-should-write-neet-exam-in-other-states-supreme-court/
 16. http://tamil.thehindu.com/tamilnadu/article24086799.ece
 17. http://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-girl-who-scored-93-per-cent-in-plus-2-kills-self-after-failing-neet-5205639/
 18. http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/may/11/neet-exam--full-details-2700335--1.html
 19. Jul 16, Rema Nagarajan / TNN / Updated:. "neet 2018 results: Some MBBS students got 0 or less in NEET papers | India News - Times of India" (en).
 20. "Students with zero, negative marks in Physics and Chemistry got MBBS seats through NEET" (en) (2018-07-16).
 21. Jul 16, Rema Nagarajan / TNN / Updated:. "neet 2018 results: Some MBBS students got 0 or less in NEET papers | India News - Times of India" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்_தேர்வு&oldid=3034119" இருந்து மீள்விக்கப்பட்டது