உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் குடியரசுக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய குடியரசுக் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியக் குடியரசுக் கட்சி (Republican party of India) இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுள் ஒன்று.பட்டியல் சாதியினரின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து இது உருவானது. மகாராட்டிர மாநிலத்தில் இக்கட்சி வலுவான நிலையில் உள்ளது. தற்போது பல பிளவுகளாக பிரிந்துள்ளது. அனைத்து பிளவுகளும் “இந்தியக் குடியரசுக் கட்சி” என்றே பெயர் கொண்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சியின் பல்வேறு பிளவுகளை அவற்றின் தலைவர்களைக் கொண்டு அடையாளாப்படுத்துகிறது. (எ. கா) இந்தியக் குடியரசு கட்சி (அத்வாலே), இந்திய குடியரசு கட்சி (எம்.ஜி.நாகமணி), இந்தியக் குடியரசு கட்சி (கவாய்), இந்தியக் குடியரசுக் கட்சி (காம்ப்ளே). பல்வேறு பிளவுகளை மீண்டும் ஒரே கட்சியாக ஒன்றிணைக்கும் முயற்சிகளும் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Veteran Republican Party of India leader R. S. Gavai no more". mid-day. 30 October 1929. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
  2. "The two Ambedkarite parties, the Republican Party of India led by Ramdas Athawale and the Bharipa Bahujan Mahasangh led by Prakash Ambedkar". http://indianexpress.com/article/cities/mumbai/ambedkarites-find-it-hard-to-stay-afloat/. 
  3. "NRP". www.nrporg.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-25.