சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
சிக்கிம் கிரந்திகாரி மோர்சா (எஸ்கேஎம்) ( மொழிபெயர்ப்பு : சிக்கிம் புரட்சிகர முன்னணி) என்பது இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.
இக்கட்சியின் தலைவரான பிரேம் சிங் தமாங் என்னும் பி. எஸ். கோலே சிக்கிம் சட்டமன்ற உறுப்பினராகவும் சிக்கிம் சனநாயக முன்னணியின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தார். மேலும் இவர் சிக்கிம் மாநில அரசில் அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில் 2009 திசம்பருக்குப் பிறகு, இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரும், சிக்கிமின் முதலமைச்சருமான பவன் குமார் சாம்லிங்கை விமர்சிக்கத் தொடங்கினார். [1]
பவன் குமார் சாம்லிங்கின் 24 ஆண்டு ஆட்சிக்கு முடிவுகட்டி 2019 ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவரான பி. எஸ் கோலே சிக்கிமின் முதலமைச்சராக பதவி ஏற்றார். [2] [3]
பொருளடக்கம்
வரலாறு[தொகு]
2014 தேர்தல்[தொகு]
2013 பெப்ரவரி 4 அன்று, சிக்கிமின் மேற்கு நகரமான சோரங்கில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி நிறுவப்பட்டது. இக்கட்சியின் செயல் தலைவராக பாரதி சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் சிக்கிம் அரசியல் கட்சிகளில் முதல் பெண் தலைவராவார்.
2013 செப்டம்பரில் இக்கட்சியின் தலைவராக பி. எஸ். கோலே தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5]
2014 ஏப்ரல் 12 அன்று நடந்த சிக்கிம் சாட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 பேரவைத் தொகுதிகளிலிலும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா போட்டியிட்டது. [6] இத்தேர்தலில் 10 இடங்களை வென்று, சிக்கிம் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் ஆனது. இத்தேர்தலில் இக்கட்சியானது 40.8% வாக்குகளைப் பெற்றது. [7] [8]
2014 செப்டம்பர் 13 அன்று நடந்த சிக்மால் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியானது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, பா.ஜா.க வேட்பாளரான பிகாஷ் பாஸ்னெட்டை ஆதரித்தது. [9]
2017 ஆம் ஆண்டு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான கன்கா நிமா லெபச்சாவை கட்சியின் செயல் தலைவராகவும், அதேபோல எம். பி. சுபா மற்றும் நவீன் கர்கி ஆகியோர் கட்சியின் பணித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலாளராக அருண் உபர்தி நியமிக்கப்பட்டார்.
2019 தேர்தல்[தொகு]
2019 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பாஜகவிடம் நெருங்கி வந்த்து. ஆனால் தனியாக போட்டியிட முடிவு செய்தது. [10]
இக்கட்சி மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் போட்டியிட்டு 17 தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து சிக்கிமில் பவன் குமார் சாம்லிங்கின் 25 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. [11]
சிக்கிம் மக்களவை தொகுதியில் இக்கட்சியின் வேட்பாளரான இந்திரா ஹாங் சுப்பா சிக்கிம் சனநாயக முன்னணியின் வேட்பாளரான தீக் பகதூர் கத்வாலை 12.443 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Himalayan Mirror, February 5, 2013, p.1. (pdf)
- ↑ [https://www.thehindu.com/elections/sikkim-assembly/who-is-ps-golay-the-new-chief-minister-of-sikkim/article27262867.ece Who is P.S. Golay, the new chief minister of Sikkim}
- ↑ New Sikkim Chief Minister PS Golay announced 5-day working week for government employees
- ↑ Golay says bye to SDF, finallyThe Telegraph, September 4, 2013. Retrieved March 19, 2014.
- ↑ "Why Sikkim is more excited about assembly polls than Lok Sabha elections | Latest News & Updates at Daily News & Analysis". பார்த்த நாள் 2015-09-25.
- ↑ "Why Sikkim is more excited about assembly polls than Lok Sabha elections?". DNA. http://www.dnaindia.com/analysis/standpoint-why-sikkim-is-more-excited-about-assembly-polls-than-lok-sabha-elections-1974542.
- ↑ SDF sweeps Sikkim pollsBusiness Standard, May 17, 2014. Retrieved May 17, 2014.
- ↑ "Partywise assembly election result status". ECI. மூல முகவரியிலிருந்து 2014-05-16 அன்று பரணிடப்பட்டது.
- ↑ Voting starts for Sikkim assembly seatThe Economic Times, September 13, 2014. Retrieved September 14, 2014. Basnet was a SKM candidate on the Sikkim Legislative Assembly Election of April 2014.
- ↑ SKM parts ways with BJP in Sikkim
- ↑ SKM wins 17 assembly seats, set to form govt
- ↑ SKM's Indra Hang Subba wins lone LS seat in Sikkim