உள்ளடக்கத்துக்குச் செல்

டி. ஆர். ஜிலியாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. ஆர். சிலியாங் (T. R. Zeliang) நாகாலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த அரசியல்வாதியும் நாகாலாந்து மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். 11 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராகப் பணியாற்றிய நைபியு ரியோ அந்த மாநிலத்தில் உள்ள ஒரே நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்று தமது பதவியிலிருந்து விலகியதை அடுத்து இவர் மே 24, 2014 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.[1] முன்னதாக நைபியு ரியோ அமைச்சரவையில் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "நாகாலாந்தின் புதிய முதல்-மந்திரியாக ஜிலியாங் இன்று பதவி ஏற்கிறார்". தினத்தந்தி. 24 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2014.
  2. இந்தியத் தேர்தல் ஆணையம்: Statistical Report on General Election, 2003 to the Legislative Assembly of Nagaland பரணிடப்பட்டது 2005-05-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._ஜிலியாங்&oldid=3505722" இலிருந்து மீள்விக்கப்பட்டது