உபேந்திர குஷ்வாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபேந்திர குஷ்வாகா, பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் பிப்ரவரி ஆறாம் நாளில் பிறந்தார். இவர் காராகாட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவரது சொந்த ஊர், பீகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4645[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேந்திர_குஷ்வாகா&oldid=3235382" இலிருந்து மீள்விக்கப்பட்டது