மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி | |
---|---|
8வது மேற்கு வங்காள முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2011 | |
ஆளுநர் | எம். கே. நாராயணன் கேசரிநாத் திரிபாதி |
முன்னையவர் | புத்ததேவ் பட்டாசார்யா |
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 01 ஜனவரி 1998 | |
முன்னையவர் | புதிதாக தோற்றுவிக்கப்பட்டது |
ரயில்துறை அமைச்சர் இந்திய அரசு | |
பதவியில் 22 மே 2009 – 19 மே 2011 | |
முன்னையவர் | லாலு பிரசாத் யாதவ் |
பின்னவர் | தினேஷ் திரிவேதி |
பதவியில் 13 அக்டோபர் 1999 - 15 மார்ச் 2001 | |
முன்னையவர் | இராம் நாயக் |
பின்னவர் | நிதீஷ் குமார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரி 5 சனவரி 1955 கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா |
இறப்பு | ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரி |
இளைப்பாறுமிடம் | ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரி |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | அஇதிகா |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | 30B, அரீஷ் சாட்டர்ஜி சாலை, காளிகாட், கொல்கத்தா, இந்தியா |
முன்னாள் கல்லூரி | பசந்தி தேவி கல்லூரி, கொல்கத்தா கொல்கத்தா பல்கலைக்கழகம் சிக்சாயாதன் கல்லூரி, கொல்கத்தா சட்டத்துறை, கொல்கத்தா பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
மம்தா பானர்ஜி (Mamata Banerjee, பிறப்பு 5 சனவரி 1955) மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் நிறுவனத்தலைவரும் ஆவார்.இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார்.
துவக்க வாழ்க்கையும் கல்வியும்
மம்தா சனவரி 5, 1955 ஆம் ஆண்டு கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள பசந்தி தேவி கல்லூரியில் பட்டம் பெற்று ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
அரசியல் வாழ்வு
அவர் தமது அரசியல் வாழ்வை காங்கிரசு(இ) கட்சியில் 1970களில் துவங்கினார். உள்ளூர் காங்கிரசில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளராக விளங்கினார்.[1] 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் மார்க்சிய அரசியல்வாதியான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வென்று இந்தியாவின் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்ற பெருமை பெற்றார். அனைத்திந்திய இளைஞர் காங்கிரசு தலைவராகவும் பதவி வகித்தார். 1989ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோற்ற மம்தா அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே 1991ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1996, 1998, 1999, 2004, 2009 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து வென்று கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர பிரதிநிதியாக உள்ளார்.[சான்று தேவை]
1997ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து பிரிந்து (மேற்கு வங்க காங்கிரசைப் பிளந்து) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கினார். திரிணாமல் காங்கிரசு, அவரது பல அரசியல் இயக்கங்களால் மேற்கு வங்காளத்தின் முதன்மை எதிர்கட்சியாக இருந்தது.
1999 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த தேசிய சனநாயக கூட்டணி அரசில் பங்கேற்று தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2001இல் ஆளும் கூட்டணியுடன் பிணக்கு கொண்டு தமது பதவியை துறந்த மம்தா 2004இல் மீண்டும் எரிசக்தித் துறை அமைச்சராக அமைச்சரவையில் இணைந்தார்.
2009ஆம் ஆண்டு காங்கிரசுடன் இணைந்து இந்திய தொடர்வண்டித்துறை அமைச்சராக இரண்டாம் முறை பதவியேற்றார். தனது முதல் வரவு செலவுத் திட்டத்தில் நிறுத்தமில்லா விரைவுத் தொடர்வண்டிகளையும் (துரந்தோ) இளைஞர்களுக்கான வண்டிகளையும் (யுவா) துவக்கியுள்ளார்.[2] மகளிர்களுக்காக நெரிசல் நேரங்களில் சிறப்பு 'மகளிர் மட்டும்' செல்லும் புறநகர் தொடர்வண்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.[3][4]
2011 சட்டப்பேரவைத் தேர்தல்
2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டு வந்த இடதுசாரி முன்னணி அரசினை வீழ்த்தினார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசு 294 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 184 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் 227 இடங்களைப் பிடித்தது. மே 20, 2011 அன்று மேற்குவங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- 2016 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசு கட்சி 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்குவங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.[5][6] இத்தேர்தலில் மம்தா பானர்ஜி பபானிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.[7] இருப்பினும் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமூல் காங்கிரசு 213 தொகுதிகளை வென்று மூன்றாம் முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.[8][9]
மேற்கோள்கள்
- ↑ Mamta Banerjee Profile incredible-people.com.
- ↑ "train travel just got better for women youth". blog.taragana.com. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
- ↑ "Ladies Special Rolls Out". www.expressindia.com. Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
- ↑ "New CST Panvel Ladies Special". www.bombay-local.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
- ↑ "NDTV Live Results". http://www.ndtv.com/elections. பார்த்த நாள்: 19 May 2016.
- ↑ http://infoelections.com/infoelection/index.php/kolkata/180-wbresult2011.html
- ↑ Nandigram election results 2021: BJP’s Suvendu Adhikari beats West Bengal CM Mamata Banerjee by 1,956 votes
- ↑ West Bengal Elction Result 2021
- ↑ 3-வது முறை: மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி மே 5-ம் தேதி பதவியேற்பு. இந்து தமிழ் திசை. 3 மே 2021.
வெளி இணைப்புகள்
- Official biographical sketch in Parliament of India website பரணிடப்பட்டது 2007-12-20 at the வந்தவழி இயந்திரம்
- Official Party website
- www.expressindia.com பரணிடப்பட்டது 2008-12-03 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய அரசியல்வாதிகள்
- மேற்கு வங்காள முதலமைச்சர்கள்
- 1955 பிறப்புகள்
- இந்தியப் பெண் முதலமைச்சர்கள்
- இந்திய இரயில்வே அமைச்சர்கள்
- வாழும் நபர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- மேற்கு வங்காள நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- மேற்கு வங்காள அரசியல்வாதிகள்
- மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்கள்
- அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அரசியல்வாதிகள்