சோம்நாத் சட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோம்நாத் சட்டர்ஜி
தனிநபர் தகவல்
பிறப்பு 25 சூலை 1929 (1929-07-25) (அகவை 91)
திஸ்பூர், அசாம்
இறப்பு ஆகத்து 13, 2018(2018-08-13) (அகவை 89)
வாழ்க்கை துணைவர்(கள்) ரேணி சட்டர்ஜி
பிள்ளைகள் 1 மகன் மற்றும் 2 மகள்கள்
இருப்பிடம் கொல்கத்தா, இந்தியா
As of செப்டம்பர் 17, 2006
Source: [1]

சோம்நாத் சட்டர்ஜி (பெங்காளி) (சூலை 25, 1929 -ஆகத்து 13, 2018)[1] இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். 14 ஆவது மக்களவையின் தலைவராக ஐந்தாண்டுகள் 2004 முதல் 2009 மே மாதம் வரை பொறுப்பு வகித்தவர். இவர் அந்த காலகட்டத்தில், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

சோம்நாத் சட்டர்ஜியின் தந்தை நிர்மல் சந்திராவும் ஒரு அரசியல்வாதியாவார். சோம்நாத் சட்டர்ஜி 1929இல், அசாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்தவர். இவர் பள்ளிக் கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பு போன்றவற்றை கொல்கத்தாவில் முடித்தார். பிரிட்டனில் சட்டம் பயின்று வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். 1968இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, அரசியலில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருந்தார்.

இவர் மக்களவைக்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 ஆவது மக்களவையின் தலைவராக அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 சூலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, கட்சி கட்டளையிட்டும் மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்துவிட்டார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது.[2]

சுயசரிதை[தொகு]

கீப்பிங் தி ஃபெயித்: மெமரீஸ் ஆஃப் எ பார்லிமெண் டேரியன் என்ற பெயரில் அவர் தனை சுயசரிதையை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சோம்நாத் சாட்டர்ஜி மறைவிற்கு இரங்கல்கள் தெரிவிக்கும் தேசிய கட்சித் தலைவர்கள்".இந்தியன் எக்சுபிரசு (ஆகத்து 13, 2018)
  2. வோஜித் பாக்சி (2018 ஆகத்து 14). "சோம்நாத் சாட்டர்ஜி: எதிர்க்கட்சிகளாலும் நேசிக்கப்பட்ட தலைவர்!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்நாத்_சட்டர்ஜி&oldid=2739392" இருந்து மீள்விக்கப்பட்டது