மல்லை சத்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லை சி.ஏ சத்யா
தனிநபர் தகவல்
பிறப்பு 10.12.1963
குரும்பிறை
அரசியல் கட்சி ம.தி.மு.க
வாழ்க்கை துணைவர்(கள்) துா்காசினி[1]
பிள்ளைகள் கீா்த்திவாசன் (மகன்), கண்ணகி(மகள்)
கல்வி சமூகவியலில் முதுகலை பட்டம்
இணையம் https://mallaisathya.in/

மல்லை சி.ஏ சத்யா (ஆங்கில மொழி:  Mallai C.E Sathya, பிறப்பு: டிசம்பர் 11 1963) தமிழ் நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணை பொதுச் செயலாளர் ஆவார். சி.ஏ. சத்யா என்ற இயற்பெயர் உடைய இவர் 10.12.1963 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் ,சாலவாக்கம் ஊராட்சி சார்ந்த குரும்பிறை என்கிற சிற்றூரில் சி.ஏகாம்பரம், நாகம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். 1996 நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார்[2]. 2021 ஆம் ஆண்டு மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். .

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுராந்தகம் (தனி) தொகுதி மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா தினமணி நாளிதழ்
  2. "மல்லை சத்யாவின் இன்னொரு முகம்". 2009-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லை_சத்யா&oldid=3590922" இருந்து மீள்விக்கப்பட்டது