பெ. பழனியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. பழனியப்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பெ. பழனியப்பன் (P. Palaniappan) என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தரும்புரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அருகிலுள்ள மோளையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1980 இல் அ.தி.மு.க. வில் இணைந்த பழனியப்பன் கிளைச் செயலாளராகி, பின் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2001-2006 காலகட்டத்தில் மொரப்பூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011 இல் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு.[1] தற்போது தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

பள்ளிக் கல்வி அமைச்சர்[தொகு]

2013 செப்டம்பர் 5 ஆம் நாள் வைகைச் செல்வன் பள்ளிக் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், பள்ளிக் கல்வி அமைச்சர் பதவியை பி. பழனியப்பன் கூடுதல் பொறுப்பாக ஏற்றார். [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._பழனியப்பன்&oldid=2067154" இருந்து மீள்விக்கப்பட்டது