மு. கண்ணப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு.கண்ணப்பன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1999 - 2004 காலகட்டத்தில் ஏ. பி. வாஜ்பாயின் அமைச்சரவையில் மரபு சாரா எரி சக்தி துறை அமைச்சராக இருந்தார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான மேலும் இவர் 1967 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில், கிணத்துக்கடவு தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1969 - 1975 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பால் வளத்துறை அமைச்சராக இருந்தார். 1989 இல் நெடுஞ்சாலை, வீட்டுவசதி மற்றும் துறைமுக அமைச்சராக திமுக அமைச்சரவையில் இடம்பெற்றார். மேலும் அவர் மு. கருணாநிதி அரசாங்கத்தில் மாநில போக்குவரத்து அமைச்சராகவும் பொறுப்புவகித்தார். 1980களில் தேர்தலில் தோல்வியுற்ற தி.மு.க.வை புதுப்பிப்பதில் அவர் தீவிரமாக பணியாற்றினார். 1994 இல், தி.மு.கவுடன் கருத்துவேறுபாடு கொண்டு கட்சியில் இருந்து விலகி மதிமுக கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார். அவர் 1996 தேர்தலில் சிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1999இல் பாஜக கூட்டணியில் திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையில் அமைச்சரானார். 2006இல், அவர் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். ஆர். பாலசுப்ரமணியனை இவர் தோற்கடித்தார்.

அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியிடம் பணியாற்ற பலரும் பயந்த காலத்தில் கருணாநிதியின் (கார்) மகிழுந்தை அவருக்கு துணிச்சலாக ஓட்டியதால் கண்ணப்பனை கருணாநிதி அவர்கள் அடிக்கடி "காரோட்டி கண்ணப்பா" என்று செல்லமாக கூறுவார். 2008 நடுப்பகுதியில் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது இருவரும் சமரசம் செய்துகொண்டதால் திமுகவில் மீண்டும் கண்ணப்பன் இணைந்தார்.[1][2]

கண்ணப்பனின் மகனான எம். கே. முத்து, தன் தந்தையைப் பின்பற்றி தி.மு.க. உறுப்பினராக அரசியலில் இருக்கிறார். கண்ணப்பனின் பேரன் நந்தா ஒரு பிரபல நடிகர் ஆவார். இவர் மௌனம் பேசியதே, ஈரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.[3] 

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
  3. Kolappan, B. (21 April 2016). "Descendants shine in party of rising sun". The Hindu இம் மூலத்தில் இருந்து 2016-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160421015034/http://www.thehindu.com/news/cities/chennai/descendants-shine-in-party-of-rising-sun/article8501998.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கண்ணப்பன்&oldid=3567811" இலிருந்து மீள்விக்கப்பட்டது