2018 தூத்துக்குடி படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூத்துக்குடி படுகொலை
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Tamil Nadu" does not exist.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி
இடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
ஆள்கூறுகள் 8°29′09″N 78°02′43″E / 8.48583°N 78.04519°E / 8.48583; 78.04519ஆள்கூற்று: 8°29′09″N 78°02′43″E / 8.48583°N 78.04519°E / 8.48583; 78.04519
நாள் 22 மே 2018 (UTC+5:30)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள்
தாக்குதல்
வகை
படுகொலை
ஆயுதம் எல்1ஏ1 எஸ்எல்ஆர்[1][2]
இறப்பு(கள்) 13
காயமடைந்தோர் 102[3]
தாக்கியோர் தமிழ்நாடு காவல்துறை, துணை பாதுகாப்புக் படை

தூத்துக்குடி படுகொலை[4] அல்லது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது மே 22, 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலைக் குறிக்கும்.

மே 22, 2018 அன்று ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின்போது காவலர்கள் அமைத்திருந்த போக்குவரத்துத் தடைகளை உடைத்தும் காவலரின் கோரிக்கையினை ஏற்காமலும் காவலர்களை தாக்கியும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தினை நோக்கிச் சென்றனர்.[5] அதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.[6] மற்றும் 102 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மறுநாள் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர்.[7]

நிகழ்விற்குப் பிறகான அரசின் நடவடிக்கைகள்[தொகு]

கலவரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் நிகழ்வின் ஒருபகுதியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மே 23 இரவு 7 மணிமுதல் இணைய சேவை நிறுத்தப்பட்டது.

ஆலையை நிரந்தரமாக மூடல்[தொகு]

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். முத்திரை வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டப்பட்டது.[8][9]

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]