கா. பூ. முனுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. பி. முனுசாமி
K. P. Munusamy
U.S. Consul General Jennifer McIntyre joined actor Vivek, Ministers K. P. Munusamy and T. K. M. Chinnayya, Mylapore MLA R. Rajalakshmi, and Rear Admiral (retired) K.R. Srinivasan at International Coastal Clean Up 2011 .jpg
முன்னாள் அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை
பதவியில்
மே 16, 2011 – மே, 2014
முன்னவர் மு. க. ஸ்டாலின்
பின்வந்தவர் எஸ். பி. வேலுமணி
தொகுதி கிருஷ்ணகிரி
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 7, 1952 (1952-06-07) (அகவை 69)
காவேரிப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) மங்கையர்க்கரசி
இருப்பிடம் காவேரிப்பட்டினம், கிருட்டிணகிரி மாவட்டம்

காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி (கே. பி. முனுசாமி) (பிறப்பு: சூன் 7, 1952) ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி. 1980 இல் காவேரிப்பட்டணம் பேரூர் அ.தி.மு.க செயலாளராக இருந்த இவர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991, 2001 ஆண்டுகளில் காவேரிப்பட்டினம் தொகுதியில் இருந்தும், 2011 இல்கிருட்டிணகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு.[1] தமிழ்நாடு அமைச்சரவையில் நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றி வந்த நிலையில் [2]. 2014-இல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.[3]

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வேப்பனபள்ளி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். [4] எனவே தாம் 03 ஏப்ரல் 2020 முதல் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து[5] 10 மே 2021 அன்று விலகினார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._பூ._முனுசாமி&oldid=3271577" இருந்து மீள்விக்கப்பட்டது