பெரியார் திராவிடர் கழகம்
பெரியார் திராவிடர் கழகம் (Periyar Dravidar Kazhagam) என்பது பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தும், மத எதிர்ப்பை ஆதரிக்கும் ஒரு தமிழ்நாட்டு சமூக, அரசியல் அமைப்பு ஆகும். இது 1996இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தது.[1] இதன் தலைவர் திருவாரூர் கே. தங்கராசு மற்றும் பொதுச் செயலாளர்கள் கொளத்தூர் மணி மற்றும் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் ஆவர்.[2][3][4] இந்திய அரசை, இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்யவேண்டாம் எனக் கோரி இந்த அமைப்பு புதுதில்லியில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியது.
பிளவு
[தொகு]ஆகத்து 2012-இல் இக்கட்சியானது இரண்டாகப் பிரிந்தது. ஒன்று கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், மற்றொன்று கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை ஆகும்.[5][6]
பெரியார் நூல் வெளியீடு
[தொகு]1925 முதல் 1938 வரை பெரியாரால் நடத்தப்பட்ட குடியரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளை 27 தொகுதிகளாக[சான்று தேவை] தொகுத்து நூல் வடிவில் சூன் 11, 2010 அன்று பெரியார் திராவிட கழகத்தாரால் வெளியிடப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Periyarites see Veeramani doing an MK". The New Indian Express. 2001-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11.
- ↑ "Kolathur Mani among 100 held". Chennai, India: The Hindu. 2004-01-31 இம் மூலத்தில் இருந்து 2004-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040217140430/http://www.hindu.com/2004/01/31/stories/2004013110200300.htm. பார்த்த நாள்: 2012-09-11.
- ↑ "The Tribune, Chandigarh, India - Nation". Tribuneindia.com. 2002-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11.
- ↑ "The Hindu : Kolathur Mani held on sedition charges". Hinduonnet.com. 2001-06-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ உதயமானது தந்தை பெரியார் திராவிடர் கழகம்
- ↑ "Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam.