திருவாரூர் கே. தங்கராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவாரூர் கே.தங்கராசு தமிழ்த் திரைப்பட திரைக்கதை, மற்றும் வசன கர்த்தா ஆவார். இவர் பெரியாரின் கொள்கைப்பற்றுள்ளவர்.

படைப்புகள்[தொகு]

ராமாயணப் பகுத்தறிவு என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். அதை அப்போதைய காங்கிரசு அரசு தடை செய்தது. இவர் எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் ரத்தக்கண்ணீர் என்ற படமாக எடுக்கப்பட்டது. அதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்தார். இவர் திருஞானசம்பந்தர் என்னும் ஒரு நாடகமும் எழுதியிருக்கிறார்.

போராட்டங்கள்[தொகு]

1957 அரசியல் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது 3,000 பேர் சிறை சென்றனர். அதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார்.

மறைவு[தொகு]

06.01.2014 (திங்கள்) அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]