ஆதி திராவிடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதி திராவிடர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
1,29,86,465[1][2](2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி)
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, சீக்கியம், கிறிஸ்தவம், பௌத்தம், இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தேவேந்திர குல வேளாளர், பறையர் & அருந்ததியர்

ஆதி திராவிடர் (Adi Dravida) அல்லது ஆதி திராவிடர்கள் என்பது 1914 முதல் தலித் இன மக்களைக் குறிப்பதற்கு இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. [3] 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, அவர்கள் மாநில மக்கள் தொகையில் சுமார் 1,29,86,465 (18%) ஆக இருந்தனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.[4]

தோற்றம்

பறையர் சமூகத்தின் தலைவராக இருந்த அயோத்தி தாசர் தீண்டத்தகாதவர்களை "பறையர்" என்று அழைப்பது இழி வழக்கு என்று வாதாடினார். அவர் தமிழ் வரலாற்றை மாற்றியமைக்க முயன்றார், பறையர்கள் நிலத்தின் அசல் குடியிருப்பாளர்கள் என்று வாதிட்டார். ஆனால் அவர்கள் உயர் சாதியினரால் அடிபணிய வைக்கப்பட்டனர். இருப்பினும், மற்றொரு பறையர் தலைவரான இரட்டமலை சீனிவாசன், "பறையர்" என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பெருமையுடன் ஆதரித்து, 1892 இல் பறையர் மகாஜன சபையை ("பறையர் மகாஜனா சட்டமன்றம்") உருவாக்கினார். [5] அயோத்தி தாசர், மறுபுறம் "ஆதி-திராவிட" சமூகத்தை விவரிக்க "அசல் திராவிடர்கள்" என்ற அமைப்பை உருவாக்கினார். 1892 ஆம் ஆண்டில், அவர் ஒரு அமைப்பை விவரிக்க "ஆதி திராவிட ஜனசபை" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், இது சீனிவாசனின் பறையர் மகாஜன சபையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், 1895 ஆம் ஆண்டில், அவர் "உர்திராவிடர்களின் மக்கள் பேரவை" யை (ஆதிதிராவிட ஜன சபா) நிறுவினார். இது சீனிவாசனின் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஒரு அமைப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மைக்கேல் பெர்குண்டரின் கூற்றுப்படி, "ஆதி திராவிடர்" என்ற கருத்தை அரசியல் விவாதத்தில் அறிமுகப்படுத்திய முதல் நபர் அயோத்தி தாசர் என்பது புலனாகிறது.[3]

1918 ஆம் ஆண்டில், ஆதி திராவிட மகாஜன சபை, தலித் சமூகத்திற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய "பரையா" (பறையர் என்ற வார்த்தையை மாற்ற இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.[6] மற்றொரு பறையர் சமூகத்தின் தலைவரான எம். சி. ராஜேஷ், சென்னை மாகாண தலைவர், மூலமாக அரசாங்க கோப்புகளில் "ஆதி-திராவிடர்" என்கிற வார்த்தையை உபயோகிக்கும் வழக்கம் ஏற்பட்டது. 1922இல் பறையர், பள்ளர், மாலா, மதிகா என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர் வார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எம்.சி.ராஜா என்பவரால், சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.[5]

1914 இல், தமிழ்நாடு சட்ட மேலவையில் "பறையர்" என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட வேண்டும் எனவும், அதற்கு மாற்றாக "ஆதி- திராவிடர்" எனவும் அழைக்கப்படும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.[7] 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், ஈ.வெ.இராமசாமி என்பவரால் "ஆதி-திராவிடர்" என்கிற சொல் மக்களிடையே பெருமளவில் பரவியது.[3] 1940 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் நான்காம் நாள் திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16வது மாகாண மாநாடு, காந்தியடிகள் பயன்படுத்திய ’அரிஜன்’ எனும் வார்த்தைக்கு மாற்றாக ’ஆதிதிராவிடர்’ என்ற பெயரை திராவிட நாட்டு ஆதிதிராவிட மக்களைக் குறிப்பிட பயன்படுத்தச் சொல்லி அரசாங்கத்தையும் பொதுமக்களையும் வேண்டிக் கொண்டது.[8]

இழைக்கப்பட்ட இன்னல்கள்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் ஆதிதிராவிட மக்கள் அனுபவித்த கொடுமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 • வயலில் கூலி வேலை செய்துவிட்டு நடுப்பகல் உணவிற்காக தங்கள் ஓலைப்பட்டையைத் தரையில் வைத்துவிட்டு எட்டி நிற்க வேண்டும். ஒவ்வோர் பட்டையிலும் பண்ணையார் உத்தரவுப்படி கூழோ சோறோ நிரப்பப்படும். அவ்வாறு நிரப்பப்படும்போது பட்டைக்கு உரியவர் அருகில் இருந்தால் கஞ்சி ஊற்றும் சாதி இந்து தீட்டாகி விடுவார் என்று மூடநம்பிக்கை வழக்கத்தில் இருந்தது.
 • வேட்டியை முழங்காலுக்குக் கீழே தொங்கும்படிக் கட்டக்கூடாது.
 • பெண்கள் இரவிக்கை அணியக்கூடாது.
 • செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது.
 • மற்றவர்கள் படிக்கும் பள்ளிகளில் மற்ற மாணவரோடு கலந்து உட்காரக்கூடாது.
 • யாரேனும் இதனை மீறிவிட்டார் எனில், மற்றவர்களோ அல்லது பண்ணையார்களின் ஆட்களோ மரத்தில் கட்டி அடிப்பர். சிலசமயங்களில் கட்டப்பட்டுள்ளவரின் மனைவியைக் கொண்டே அடிக்கச் சொல்வர், மறுத்தால் மறுப்பவருக்கு அத்தண்டனை வழங்கப்படும்.
 • தஞ்சைப் பகுதியில் தண்டிக்கப்படுபவருக்கு சாணியை நீரில் கரைத்த சாணிப்பால் எனும் திரவத்தை வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்வர்.[9]

குறிப்புகள்

 1. "Half of India’s dalit population lives in 4 states". The Times of India. 2013-05-02. http://timesofindia.indiatimes.com/india/Half-of-Indias-dalit-population-lives-in-4-states/articleshow/19827757.cms. பார்த்த நாள்: 2018-02-12. 
 2. "Census of india 2011". Government of India.
 3. 3.0 3.1 3.2 Bergunder 2004.
 4. "Half of India’s dalit population lives in 4 states". The Times of India. 2013-05-02. http://timesofindia.indiatimes.com/india/Half-of-Indias-dalit-population-lives-in-4-states/articleshow/19827757.cms. பார்த்த நாள்: 2018-02-12. 
 5. 5.0 5.1 Srikumar 2014.
 6. Christophe Jaffrelot (2003). India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India. Columbia University Press. பக். 169–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-12786-8. https://books.google.com/books?id=qJZp5tDuY-gC&pg=PA169. 
 7. Bergunder 2011.
 8. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 578-579
 9. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 638-641
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_திராவிடர்&oldid=3116069" இருந்து மீள்விக்கப்பட்டது