உள்ளடக்கத்துக்குச் செல்

ரோட் மார்ஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோட் மார்ஷ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரோட்னி வில்லியம் மார்ஷ்
பிறப்பு(1947-11-04)4 நவம்பர் 1947
ஆர்மடேல், மேற்கு ஆஸ்திரேலியா
இறப்பு4 மார்ச்சு 2022(2022-03-04) (அகவை 74)
அடிலெயிட், தெற்கு ஆஸ்திரேலியா
பட்டப்பெயர்பச்சூச், அயர்ன் குளோவ்ஸ்
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை
பங்குஇலக்குக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 249)27 நவம்பர் 1970 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு6 சனவரி 1984 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 7)5 சனவரி 1971 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப12 பெப்ரவரி 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1969–1984மேற்கு ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 96 92 257 140
ஓட்டங்கள் 3,633 1,225 11,067 2,119
மட்டையாட்ட சராசரி 26.51 20.08 31.17 23.03
100கள்/50கள் 3/16 0/4 12/55 0/9
அதியுயர் ஓட்டம் 132 66 236 99*
வீசிய பந்துகள் 72 0 142 23
வீழ்த்தல்கள் 0 1 0
பந்துவீச்சு சராசரி 84.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
343/12 120/4 803/66 182/6
மூலம்: Cricinfo, 20 நவம்பர் 2008

ரோட்னி வில்லியம் மார்ஷ் (Rodney William Marsh; 4 நவம்பர் 1947 – 4 மார்ச் 2022) ஆத்திரேலிய முன்னாள் தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் ஆஸ்திரேலிய தேசிய துடுப்பாட்ட அணிக்கு இலக்குக் கவனிப்பாளராக விளையாடினார் .

மார்ஷ் 1970-71 முதல் 1983-84 ஆம் ஆண்டு வரை இவர் 96 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 3,633 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 132 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவர் 355 மட்டையாளர்களை இலக்குக் கவனிப்பாளராக இருந்து வீழ்த்தி உலக சாதனை படைத்தார், மேலும் மேற்கு ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணியின் வீரர் டென்னிஸ் லில்லி உடன் இணைந்து 95 தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர்களையும் வீழ்த்தியுள்ளார். இந்த இணை ஒரே தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அறிமுகமாகினர். பின்னர் ஒரே போட்டியில் துடுப்பாட்ட வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றனர்.[1]

2009 ஆம் ஆண்டில், மார்ஷ் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் புகழவையில் (hall of fame) சேர்க்கப்பட்டார் .[2]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

மார்ஷ் தனது மூத்த சகோதரர் கிரஹாமுடன் தனது வீட்டின் பின்புறத்தில் துடுப்பாட்டம் விளையாடினார். அவர் ஒரு தொழில்முறை குழிப்பந்தாட்ட வீரராகி, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் பதினொரு முறை வென்றார். இரு சகோதரர்களும் பள்ளி அளவிலான துடுப்பாட்டப் போட்டிகளில் WA அணியினை பிரதிநிதித்துவப்படுத்தினர். மார்ஷ் தனது 16 ஆம் வயதில் அர்மடேல் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார். பதின்மூன்று வயதில் அவர் மாநில பள்ளி மாணவர்களின் அணியின் தலைவராக இருந்தார், மேலும் வெஸ்ட் பெர்த் மாவட்ட சங்கத்தில் சேர்ந்தார்.

வெஸ்ட் பெர்த்தின் முதல் லெவன் அணி சார்பக அவர் அறிமுகமானபோது, அவர் ஒரு துணை மட்டையாளராக இருந்தார். ஏனெனில் WA இலக்குக் கவனிப்பாளர் கோர்டன் பெக்கரும் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் மார்ஷ் மேற்கு ஆத்திரேலிய பல்கலைக்கழக சங்கத்தில் சேர்ந்தார். 1968 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிகு எதிராக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் போட்டியில், 0 மற்றும் 104 ஓட்டங்கள் எடுத்தார்.[1]

ஓய்விற்குப் பிறகு[தொகு]

மார்ஷ் 1986-1990 மற்றும் 1996-1998 க்கு இடையிலான காலங்களில் நைன் தொலைக்காட்சியில் சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருந்தார்.

துவக்கத்தில் இருந்தே அடிலெய்டில் உள்ள ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அகாதமியில் பயிற்சியாளராக இருந்த அவர் 1990 முதல் 2001 வரை அதன் இயக்குநராக இருந்தார். ஆஸ்திரேலிய சர்வதேச இழப்புக் கவனிப்பாளர் - மட்டையாளர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேசன் கில்லெஸ்பி மற்றும் பிரட் லீ ஆகியோர் இவரது பயிற்சியின் கீழ் விளையாடியவர்கள் ஆவர்.[3]

மார்ஷ் அக்டோபர் 2001 முதல் செப்டம்பர் 2005 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியத்தின் (ஈசிபி) தேசிய அகாடதயின் இயக்குநராக இருந்தார்.இந்த சமயத்தில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி வலிமையான அணியாக இருந்தது.2005 ஆம் ஆண்டில், அவர்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷஸ் தொடரினை வென்றனர்.

ஜான் இன்வெராரிட்டிக்கு பதிலாக, மே 2, 2014 அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்டத் தேர்வாளர்களின் தலைவராக மார்ஷ் நியமிக்கப்பட்டார்.[4]

மரியாதைகள்[தொகு]

மார்ஷ் 1981 ஆம் ஆண்டில் பிரித்தானிய பேரரசின் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டில் ஸ்போர்ட் ஆஸ்திரேலியா ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் .[5][6] 2000 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய விளையாட்டு பதக்கத்தையும் 2001 இல் ஒரு நூற்றாண்டு வீரருக்கான பதக்கத்தையும் பெற்றார்.[7][8]

2005 ஆம் ஆண்டில், அவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் புகழவையில் சேர்க்கப்பட்டார்.[9]

மறைவு[தொகு]

ரொட் மார்சுக்கு 2022 பெப்ரவரி 24 இல் மாரடைப்பு ஏற்பட்டது.[10][11] எட்டு நாட்களின் பின்னர், 2022 மார்ச் 4 இல், தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெயிட் நகரில் தனது 74-வது அகவையில் காலமானார்.[12][13][14]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Cricinfo
 2. Cricinfo (2 January 2009). "ICC and FICA launch Cricket Hall of Fame". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
 3. Cashman; Franks; Maxwell; Sainsbury; Stoddart; Weaver; Webster (1997). The A-Z of Australian cricketers. pp. 180–194.
 4. "Rod Marsh replaces John Inverarity as Australian cricket's chairman of selectors". ABC. 2 May 2014.
 5. "Marsh, Rodney William, MBE". It's an Honour. பார்க்கப்பட்ட நாள் 29 October 2013.
 6. "Rod Marsh MBE". Sport Australia Hall of Fame. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "Marsh, Rodney William: Australian Sports Medal". It's an Honour. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. "Marsh, Rodney: Centenary Medal". It's an Honour. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 9. Cricinfo Staff (30 January 2005). "Marsh and Hill in Hall of Fame". ESPN. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
 10. "Rod Marsh: Former Australia wicketkeeper in critical condition after heart attack". BBC Sport. 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
 11. "Rod Marsh, the former Australia wicketkeeper, in hospital following heart attack". Sky Sports. 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
 12. Conn, Malcolm (3 March 2022). "Cricket legend Rod Marsh dies aged 74". The Sydney Morning Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
 13. Meher-Homji, Kersi (4 March 2022). "Rodney Marsh: A great gloveman who became part of nation’s folklore". WA Today. https://www.watoday.com.au/national/rodney-marsh-a-great-gloveman-who-became-part-of-nation-s-folklore-20220302-p5a0yz.html. 
 14. "Former Australia wicketkeeper Rod Marsh dies aged 74". Cricinfo. 4 March 2022. https://www.espncricinfo.com/story/former-australia-wicketkeeper-rod-marsh-dies-aged-74-1303423. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்_மார்ஷ்&oldid=3986825" இலிருந்து மீள்விக்கப்பட்டது