ரோகன் போபண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோகன் போபண்ணா
Rohan Bopanna at the 2013 French Open
நாடு இந்தியா
வாழ்விடம்பெங்களூர், இந்தியா
உயரம்1.90 m (6 அடி 3 அங்) (6 அடி 3 அங்)
தொழில் ஆரம்பம்2003
பரிசுப் பணம்US$ 2,896,162[1]
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்14–33
பட்டங்கள்0
அதிகூடிய தரவரிசைNo. 213 (23 சூலை 2007)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்Q2 (2006, 2007, 2008)
பிரெஞ்சு ஓப்பன்Q1 (2006)
விம்பிள்டன்Q2 (2006)
அமெரிக்க ஓப்பன்Q2 (2007)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்263–188[1]
பட்டங்கள்14
அதியுயர் தரவரிசைNo. 3 (22 சூலை 2013)
தற்போதைய தரவரிசைNo. 10 (06 மே 2016)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2008, 2011, 2012, 2014)
பிரெஞ்சு ஓப்பன்QF (2011, 2016)
விம்பிள்டன்SF (2013, 2015)
அமெரிக்க ஓப்பன்F (2010)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour FinalsF (2012, 2015)
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்QF (2013, 2014, 2016)
பிரெஞ்சு ஓப்பன்QF (2014)
விம்பிள்டன்QF (2013)
அமெரிக்க ஓப்பன்QF (2014)
பதக்கத் தகவல்கள்
இற்றைப்படுத்தப்பட்டது: 1 பெப்ரவரி 2016.

ரோகன் போபண்ணா (Rohan Bopanna, கன்னடம்: ರೋಹನ್ ಬೋಪಣ್ಣ) (பிறப்பு மார்ச் 4, 1980) இந்திய டென்னிசு விளையாட்டு வீரர் ஆவார். ஒற்றையர் ஆட்டங்களில் உலகளவில் இவரது மிக உயரிய தரவரிசையெண் 2007இல் 213 ஆக இருந்தது. இரட்டையர் ஆட்டங்களில் உலகில் மிக உயரிய தரவெண்ணாக சூலை 22, 2013இல் 3யை எட்டினார். அண்மையில், பெரும்பாலான போட்டிகளில் இரட்டையர் ஆட்டங்களில் மட்டுமே பங்கெடுக்கின்றார். இந்திய டேவிசுக் கோப்பை அணியில் 2002இலிருந்து தொடர்ந்து இடம் பெற்றுள்ளார்.[2] 2010இல், யூ. எசு. ஓப்பனில் ஐசம்-உல்-அக் குரேசியுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் இரண்டாமிடத்தை எட்டினார்.[3]

இரட்டையர் ஆட்டக்காரர்களில் தற்போது உலகில் பத்தாவது இடத்தில் உள்ளார்.[4] போபண்ணா தமது 11வது அகவையிலேயே விளையாடத் தொடங்கினார். இரட்டையர் ஆட்டங்களில் தமது வாழ்நாளின் மிக உயரிய தரவரிசையெண்ணை சூலை 22, 2013இல் அடைந்தார்; தொழில்முறை டென்னிசு விளையாட்டளர்களின் சங்கம் இவருக்கு தரவெண் 3 வழங்கியது. இவரும் பாக்கிதானிய விளையாட்டாளர் குரேசியும் 2007 இல் இணைந்து பல வெற்றிகளை ஈட்டினர். இதனால் இவர்களுக்கு இந்தோபாக் எக்சுபிரசு என்ற செல்லப்பெயர் ஏற்பட்டது. 2010 இல் இந்த இணையர் விம்பிள்டன் காலிறுதி, யூ.எசு. ஓப்பனில் இரண்டாமிடம், மற்றும் ஐந்து ஏடிபி கோப்பைகளை வென்றனர். ஜோகன்னசுபெர்கு ஓபனையும் வென்றனர். 2010 ஆம் ஆண்டு டேவிசு கோப்பை போட்டியில் இந்தியா பிரேசிலை வெல்வதற்கு போபண்ணா பெரும் பங்காற்றினார். இதனால் 1988க்குப் பிறகு இந்தியா முதன்முறையாக உலக குழு போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.[5]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகன்_போபண்ணா&oldid=3570002" இருந்து மீள்விக்கப்பட்டது